Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தன்மானம் – பிச்சைக்காரருக்கும் உண்டு – ஓர் உண்மைச் சம்ப‌வம்

தன்மானம் – பிச்சைக்காரருக்கும் உண்டு – ஓர் உண்மைச் சம்ப‌வம்

தன்மானம் – பிச்சைக்காரருக்கும் உண்டு – ஓர் உண்மைச் சம்ப‌வம்

இன்று காலை எனது அலுவலகத்திற்கு வந்து கொண்டிருப்ப‍து எனது

கைபேசி சிணுங்கியதன் காரணமாக எனது வாகனத்தை சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு, எனது கைபேசியில் பேசி தொடர்பை துண்டித்து விட்டு எனது சட்டை ப்பையில் போடும் வேளையில் ஒரு சம்பவத்தை பர்த்தேன். நெகிழ்ந்து போனேன்.

எனக்கு முன் சில அடி தூரத்தில் ஒரு பிச்சைக்காரர், சாலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வ‍ழியே வந்த ஒரு ஆட்டோ, இவரை பார்த்த‍தும் திடீரென்று பிரேக் போட்டு நின்றது. அதிலிருந்து இறங்கிய ஓட்டுநர் கையில் ஒரு பையை அவரிடம் இதனை சாப்பிடு என்று சொல்லி கொடுத்தார். அந்த பிச்சைக் காரரும் அதனை வாங்கி உள்ளே கை விட்டு பார்க்கும்போது, அந்த உணவு கெட்டுப் போயிருப்ப‍தை உணர்ந்த அவர், அந்த ஆட்டோ ஓட்டுநரை, “யோவ் இங்க வாய்யா, என்ன‍ பிச்சைக்காரன்னா உனக்கு எளக்காரமா போச்சா, கெட்டுப் போன சாப்பாட்ட‍ கொடுக்கற, இத நீயே வெச்சுக்க‍,” என்று கொடுக்கும்போது கூடவே “நா வேணும்னா உனக்கு 100 ரூபா கொடுக்க‍ற நீ இத சாப்பிடுவியா” என்று கேட்டார்.

இதனை சற்றும்எதிர்பாராத அந்த ஆட்டோ ஓட்டுநர், “பிச்சைக்காரனுக்கு எவ்வ‍ளவு திமிர், அதனால்தான் கடவுள் இவனுங்க வைக்க‍ வேண்டிய இடத்துலதான வெச்சுரு க்காரு” என்ற திட்டியபடியே அவர் கொண்டுவந்த அந்த சாப்பாட்டு பையை சாலையிலேயே வீசி எறிந்து விட்டு, ஆட்டோவை கிளப்பி, ஓட்டிச் சென்றார்.

அந்த ஆட்டோ ஓட்டுநரின் பார்வையில் இந்த பிச்சைக்காரர் திமிர் பிடித்தவனாக தென்பட்டிருக்க‍லாம் ஆனால் என் பார்வையில், என்ன‍தா பிச்சைக்காரராக இருந் தாலும், கொடுத்த‍ உணவு கெட்டுப் போனது என்று தெரிந்து, அதனை சாப்பிடாலும் குப்பையிலும் எறியாமல், அதைகொடுத்த‍ ஆட்டோ ஓட்டுநரையே திரும்ப அழைத்து, அவனிடமே திருப்பிக் கொடுத்து, அந்த ஓட்டுநருக்கு புத்திபுகட்டிய நிகழ்வு என்னை நெகிழ வைத்தது.

அந்த பிச்சைக்காரரின் தன்மான உணர்வை பாராட்டி, என்னால் முடிந்த ஒரு சிறு தொகையை கொடுத்தேன். அதனை பெற்றுக் கொண்ட அந்த பிச்சைக்காரர், எனக்கு நன்றி தெரிவித்து என்னை இன்னும் நெகிழ வைத்தார்.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

 

#Beg #Beggar #Begging #ATrueStory #TrueStory #ARealStory #RealStory #Real #vidhai2virutcham #SelfRespect

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: