பெறும் பெரும் – இவ்விரண்டு வார்த்தைகளுக்கிடையே உள்ள வேறுபாடு
பெறும் பெரும் – இவ்விரண்டு வார்த்தைகளுக்கிடையே உள்ள வேறுபாடு
பெறும் பெரும் – இவ்விரண்டு வார்த்தைகளுக்கிடையே உள்ள
வேறுபாடா? இவற்றின் வேறுபாடா? இரண்டும் ஒன்றுபோல்தானே தெரிகிறது என்று தமிழை முழுமையாக அறிந்திடாதவர்கள் கேட்பார்கள். ஆனால் இவ்விரண்டு வார்த்தை களுக்கு மடுவுக்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு உண்டு.
மேற்சொன்ன பெறும் பெரும் என்ற இரண்டு வார்த்தைகளும் ஒரே மாதிரியாக உச்சரிக்கப்படுவதில்லை. உச்சரிப்புக்களில் மட்டுமல்ல இவையிரண்டும் வெவ்வேறு பொருளை தரக்கூடியவை.
‘பெறும்’
– என்ற வார்த்தையை உச்சரிக்கும் முறையையும், அதன் பொருளையும் முதலில் இங்கு காண்போம்.
‘பெறும்’ என்ற வார்த்தையில் உள்ள ‘று’ என்ற எழுத்தை உச்சரிக்கும்போது, உங்கள் நாக்கை உள்ளே மடித்து நமது வாயின் உட்பகுதியில் உள்ள மேல் அன்னத்தை தொட்டும் தொடாமலும் உச்சரிக்க வேண்டும்.
இதன் பொருள்.- வாங்குதல் ஆகும். ஒருவர் ஏதோ உங்களிடம் கொடுக்கும் அதனை நீங்கள் வாங்கும் போது அதாவது ‘பெறும்’போது என்ற பொருள் தரும்.
‘பெரும்’
– என்ற வார்த்தையை உச்சரிக்கும் முறையையும், அதன் பொருளையும் இங்கு காண்போம்.
‘பெரும்’ என்ற வாரத்தையை நீங்கள் சாதாரணமாகவே உச்சரிக்கலாம்.
இதன் பொருள் – பெரிய, அதிக என பொருள்படும். அதாவது எனக்கு அதிக பங்கு வேண்டும் என்பதை எனக்கு ‘பெரும்’பங்கு வேண்டும் என்று சொல்லலாம்.
ஆக, இந்த இரு வார்த்தைகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளை அறிந்து கொண்டு, சரியான இடத்தில் சரியாக உச்சரித்து தமிழின் இனிமையை காப்போம்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி