Tuesday, June 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இறால் பொடிமாஸ் – முட்டை இறால் பொடிமாஸ் – செய்முறை

இறால் பொடிமாஸ் – முட்டை இறால் பொடிமாஸ் – செய்முறை

இறால் பொடிமாஸ் – முட்டை இறால் பொடிமாஸ் – செய்முறை

குழந்தைகளுக்கு முட்டை பொடிமாஸ் என்றால் அலாதி பிரியம். அதனை அவர்கள் விரும்பி சாப்பிடுவர். இறால் பொடிமாஸ் என்றால் கேட்கவே வேண்டாம், சமைக்கும் போதே, இதன் வாசனையினால் ஈர்க்க‍ப்பட்டு, ஓடிவந்து வாங்கி சாப்பிடு வார்கள். இறால் பொடிமாஸ் என்றால் இதன் சுவையும் மணமும் அதிகரிக்கும். அதன் செய்முறையையும், இந்த இறால் பொடிமாஸ்-உடன் முட்டை சேர்த்தால், முட்டை இறால் பொடிமாஸ் அவற்றின் செய்முறையையும் இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்:

முட்டை – 2
இறால் – 100 கிராம் 
வெங்காயம் – 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
உப்பு – 1/2 ஸ்பூன்
வெங்காயத்தாள் – சிறிதளவு
மிளகு தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத் தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.சூப்பரான இறால் பொடிமாஸ் தயார்.

இதில், கடைசியாக நறுக்கிய இறால், வெங்காயத்தூள் சேர்ப்பதற்கு முன்பு அதில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும். உடைத்து ஊற்றிய முட்டைகள் நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால்களை, வெங்காயத்தாளோடு சேர்த்து போட்டு நன்றாக கலந்தால், முட்டை இறால் பொடிமாஸ் தயார்

=> தமிழ்

#EralEggPodimas #EralMuttaiPodimas #PrawnEggFry #PrawnEggPodimas  #vidhai2virutcham  #முட்டை #இறால் #பொடிமாஸ் #முட்டைஇறால்பொடிமாஸ் #இறால்பொடிமாஸ் #முட்டைபொடிமாஸ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: