மறக்க முடியாத என் அந்தமான் அனுபவம் – நடிகை மேகா ஆகாஷ்
மறக்க முடியாத என் அந்தமான் அனுபவம் – நடிகை மேகா ஆகாஷ்
பயணம் மேற்கொள்ளும் பலருக்கும் பற்பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அந்த வகையில் பூமராங்க் திரைப்படத்தின் நாயகி மேகா ஆகாஷ்-க்கு ஏற்பட்ட அந்தமான் அனுபவம் குறித்து அவரே விவரிக்கிறார். அந்த திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி அந்தமானில் நடைபெற்றது. அதற்காக விமானத்தில் சென்று கொண் டிருக்கும் போது, அருகில் இருந்தவர்களிடம், நாம் நிறைய நேரத்தை போனில் தான் செலவிடுறோம். அதனால கொஞ்ச நாள் இந்த போன்லாம் இல்லாம இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லிட்டு இருந்தேன். அந்தமான் போய் இறங்கிய துமே எல்லோரோட போன்லையும் சிக்னல் இல்ல. போன் யூஸ் இல்லாம போயிடிச்சி. இதுவே மறக்க முடியாத என் அந்தமான் அனுபவம் என்று நடிகை மேகா ஆகாஷ் கூறினார்.