ஏன்? ஒட்டியாணம் இளம்பெண்கள் அவசியம் அணிய வேண்டும்
ஏன்? ஒட்டியாணம் இளம்பெண்கள் அவசியம் அணிய வேண்டும்
பெண்களின் ஒவ்வொரு அங்கங்களுக்கும் தனித்தனியான
அணிகலன்கள் உண்டு. அந்த அணிகலன்களில் மிகவும் அழகானது எதுவென்றால் அது ஓட்டியாணம் மட்டுமே. இந்த ஒட்டியாணம் அணியும் பழக்கம் தொன்று தொட்டே நமது தமிழர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிவிட்ட ஒன்று.
இந்த ஒட்டியாணம் என்ற அணிலனை எப்போதும் அணிந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. விழாக்காலங்கள், பண்டிகளைகள் போன்ற நல்ல நாட்களில் மற்ற ஆபரணங்களை அணியும் போது இந்த ஒட்டியாணத்தையும் சேர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஒட்டியாணம் அணியும் பெண்களின் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் நல்ல முறையில் தூண்டப்பட்டு, அவர்கள் இடுப்பு மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் பெருகும். மேலும்.வயிற்று பகுதியும் பலம்பெறும். அதனாலேயே ஒட்டியாணம் இளம் பெண்கள் அவசியம் அணிய வேண்டுமாம்.
இதனால் ஆண்கள் என்மீது கோபப்பட வேண்டாம்.
தகவல் – விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
#ottiyanam #ஒட்டியாணம் #Hip #இடுப்பு #vidhai2virutcham