கதறி அழுத ராமபிரான். ஏன்? – ஊரறியா அரியதோரான்மீக தகவல்
கதறி அழுத ராமபிரான். ஏன்? – ஊரறியா அரியதோரான்மீக தகவல்
இராமாயணம் எனும் மகாகாவியம் அறியாதவர்கள் யார்? ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு ராம்பிரான் கதறி அழுத காட்சி, இராமாயணத்தில் இருக்கிறது என்று தெரியும்? அதுகுறித்த தகவலை இங்கு காண்போம். இராம பிரானின் தாயார், கௌஸல்வின் மரணமடைந்த தருணத்தில், ஸ்ரீராமர் அதிகளவு தானதர்மங்களை செய்தாராம். அதன்பிறகு
தன் குரு, வசிஷ்டரை வணங்கி, “ஸ்வாமி நான் நிறைய தான, தர்மங்களை செய்தேன். கோடி பசுக்களை கோதானம் செய்துவிட்டேன். இதனால் என் பிரியமான தாயின் மனம் மகிழ்ச்சி அடைந்திருக்கும் அல்லவா ?..’என்று கேட்டாராம் .
அதற்கு வசிஷ்டர், “அப்பனே ! ஒரு சமயம் , உன் தாய் உன்னை வயிற்றில் சுமந்து கொண்டிருந்த போது , நான் எதிரில் வந்தேன் !..உடனே எனக்கு மரியாதை செய்யும் நிமித்தம் , ஆயாசத்துடன் தரையில் உட்கார்ந்திருந்தவள், அவசர அவசரமாக , இடக் கையை தரையில் ஊன்றிக்கொண்டு, வெகுசிரமத்துடன் எழுந்துகொண்டாள்! அந்த ஒரு சிரமத்துக்கு ஈடாகாது நீ செய்த கோதானமும், மற்ற தானங்களும்! என்றாராம்!
கண்களில் இப்போது தாரைதாரையாய் கண்ணீர் பெருக கதறி அழுதாராம் ராமபிரான்.
தாய்தான் முதல் தெய்வம்!!!
((((வாட்ஸ் அப்பில் வந்தது ))))