எனக்கு எந்த பயமும் இல்லை, எந்த கவலையும் இல்லை – நடிகை ஓவியா
எனக்கு எந்த பயமும் இல்லை, எந்த கவலையும் இல்லை – நடிகை ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடித்து விரைவில் வெள்ளித்திரைக்கு
வரவிருக்கும் திரைப்படம்தான் 90 எம்.எல். (90 ml) இதுபோன்ற சர்ச்சையான கதையை தேர்ந் தெடுத்தது ஏன்? என்ற கேள்விக்கு நடிகை ஓவியா அளித்த பேட்டி
பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருக்கி ன்றன. அந்த கட்டுப்பாடுகளை மீறவேண்டும் என்பதே இப்படத்தின் ஒருவரி கதை. படத்தில் வயது வந்தோருக்கான விஷயங்கள் இருப்பதால்தான் ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். யூடியூப்களில் எல்லாம் இதைவிட ஆபாசம் இருக்கிறது. படத்தில் பேசப்படும் வசனங்கள் எல்லாவற்றையும் ஓவியா பேசியதாக பார்க்க வேண்டாம். படத்தில் வரும் ரீட்டா கதாபாத்திரம் பேசியதாக பாருங்கள்.
இதுபோன்ற கதை உங்கள் இமேஜை பாதிக்குமே?
பிக்பாஸ் உள்பட எங்குமே எதையுமே நான் பெயருக்காகவோ புகழுக்காகவோ செய்ய வில்லை. அப்படி இமேஜ் பார்த்து நான் நடந்துகொண்டு இருந்தால் இந்த பெயரோ புகழோ எனக்கு கிடைத்து இருக்காது. எனவே பெயர் போய்விடுமோ என எனக்கு எந்த பயமும் இல்லை. ஒரே மாதிரி என்னால் நடிக்க முடியாது. அது போரடிக்கும். பெயர், புகழ் பற்றி கவலை இல்லை. காரணம் எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.
#oviya #90ml #ninetyml #ஓவியா #பிக்பாஸ் #BIGGBOSS #vidhai2virutcham