Tuesday, June 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விழாவில் சுந்தர் சி வேதனை

விழாவில் சுந்தர் சி வேதனை

விழாவில் சுந்தர் சி வேதனை
‘ஹிப் ஹாப்’ ஆதி, அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த் உள்ளிட்ட

பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நட்பே துணை’ இத்திரைப்படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். இயக்குனர் சுந்தர்.சி, அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடை பெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் சுந்தர்.சியும் கலந்து கொண்டார். சுந்தர்.சி பேசியது; இத் திரைப்படத்துக்காக அனைவருமே உழைத்துக் கொண்டே இருந்தார்கள். நான் இயக்கும் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை. என் படங்களில் பொழுது போக்கை மட்டுமே எதிர்பார்த்து வருவார்கள். கருத்து சொன்னால் ‘அன்பே சிவம்‘ மாதிரி ரிசல்ட் கொடுத்து விடுகிறார்கள் என்று வேதனையோடு தெரிவித்த‍ அவர், மேலும் ‘நட்பே துணை’ கதையைக் கேட்டவுடன் ரொம்ப பாசிட்டிவாக இருந்தது. காதல், காமெடி, எமோ‌ஷன் என அனைத்துமே இருக்கிறது. இதெல்லாம் கடந்து நல்ல ஒரு பாசிட்டிவ் வைப்ரே‌ஷன் இருந்தது. மீசையை முறுக்கு போலவே இந்த படமும் பெரிய வெற்றி பெறும்’. இவ்வாறு அவர் பேசினார்.

#NatpeThunai #HipHopThamizha #SundarC #MeesaiaiMurukku #vidhai2virtcham #Anaga  #சுந்தர்_சி #நட்பேதுணை #ஹிப்ஹாப்ஆதி #அனகா 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: