Monday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமதி என்ற‌ அடைமொழியை திரும‌ணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் குறிப்பிடுவது ஏன்?

திருமதி என்ற‌ அடைமொழியை திரும‌ணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் குறிப்பிடுவது ஏன்?

திருமதி என்ற‌ அடைமொழியை திரும‌ணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் குறிப்பிடுவது ஏன்?

திருமணமான பெண்களின் பெயருக்கு முன்பு நாம் ஏன் திருமதி என்ற

அடைமொழியை குறிப்பிடுகிறோம். தெரியுமா? ஒரு பெண் திருமணத்திற்கு முன்னால், அவளது பெயருக்கு முன்னால் செல்வி என்ற அடைமொழியை குறிப்பிடுகிறோம். ஆனால் அதே பெண், திருமண மான பிறகு, திருமதி என்ற அடைமொழியை அவளது பெயருக்கு முன்னால் ஒட்டிக் கொள்கிற‌து.

பொதுவாக உடலளவில் பெண்ணைவிட ஆண், பலசாலியாக இருந்தாலும், மனதளவில், ஆணை விட பெண்ணே வலிமையானவள். ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், உடனடியாக அந்த ஆண் சோர்ந்து தனது தன்னம்பிக்கையும் துணிச்சலை யும் இழுந்து விடுவான். அந்த நேரத்தில் அந்த ஆணின் மனைவியானவ‌ள், அந்த பிரச்சினைகளில் இருந்து விடும்பட மதிநுட்பத்தோடு சில ஆலோசனைகளையும், தீர்வுகளையும் சொல்லி, அந்த ஆண், இழந்த தன்னம்பிக்கையையும், துணிச்ச‍லை யும் மீண்டும் அவனுக்குள் புகுத்தி, அந்த ஆணை எழுச்சி அடையச் செய்வாள். அதனால்தான் மதிநுட்பத்துடன் ஆலோசனை வழங்கும் ஒரு சிறந்த‌ மந்திரியாக விளங்குவாள் என்பது மூத்தோர் சொல்லியுள்ள‍னர்.

ஆகவே மதிநுட்பம் என்ற வார்த்தையில் வரும் ‘மதி’ என்ற முதல் இரண்டு எழுத்துக்களையும், ஆணின் பெயருக்கு முன்னால் அடைமொழியாக‌ உள்ள‍ திரு என்ற இரண்டு எழுத்துக்களையும் சேர்த்தால், திருமதி என்று ஆகிறது. அதனால் தான் திருமணமான பெண்களின் பெயருக்கு முன்னால் திருமதி என்ற அடைமொழி குறிப்பிடுகிறார்கள்.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

#திரு #திருவாளர் #திருமதி #மதிநுட்பம் #மனைவி #மந்திரி #அடைமொழி #பொண்டாட்டி #சம்சாரம் #கணவன் #vidhai2virutcham #Thiru, #Thirumathi #Thirumadhi

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: