திருமாவளவனும் சீமானும்
திருமாவளவனும் சீமானும்
தற்போது நாடாளுமன்றத்தின் தேர்தல் தேதி விரைவில்
அறிவிக்கப்படும் சூழ்நிலையில், பல கட்சிகள், கூட்டணி அமைத்தும், சில கட்சிகள் தனித்தும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன• இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும் உள்ள தொடர்பை இங்கு காணலாம்.
ஒருமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சித் தலைவர், சீமானிடம் செய்தியாளர் ஒருவர், நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிடு வீர்களா? என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு சீமான் அவர்கள், நான் போட்டியிட மாட்டேன். அதற்கு தகுதியான எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை போட்டியிட வைப்பேன் என்றார்.
இதே கேள்வியை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், திருமாவளவனிடம் கேட்டபோது, அதற்கு அவர், நாடாளுமன்ற தேர்தலில் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றார்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி