Twenty 20 – திமுக கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு – முழு விவரம்
20க்கு 20 – திமுக கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு – முழு விவரம்
2019 பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட
உள்ள நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த் தை நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக வின் கூட்டணி தேமுதிக-வை இணைக்க பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியாகவே இருந்து வருகிறது. ஆனால் திமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இன்று முறைப்படி அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் முறைப்படி அறிவித்தார்.
திமுக கூட்டணியில்…
திமுக – 20 தொகுதிகள்
காங்கிரசு – 10 தொகுதிகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி – 2 தொகுதிகள்
இந்திய கம்யூனிஸ்ட் – 2 தொகுதிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2 தொகுதிகள்
மதிமுக – 1 தொகுதி மற்றும் மாநிலங்களவை சீட் – 1
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 1 தொகுதி
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி-1 தொகுதி
இந்திய ஜனநாயக கட்சி – 1 தொகுதி
மனித நேய மக்கள் கட்சி – எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.
இதையடுத்து, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.