Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தியாவின் இரண்டாவது நான்காவது பிரதமர் யார் தெரியுமா?

இந்தியாவின் இரண்டாவது நான்காவது பிரதமர் யார் தெரியுமா?

இந்தியாவின் இரண்டாவது நான்காவது பிரதமர் யார் தெரியுமா?

1979ல் என்தந்தை கோயம்புத்தூரில் Deputy Collectorஆக பதவி வகித்தார். அப்போது

நான் சென்னையில் வேலை செய்துகொண்டு இருந்தேன். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நானும் என் சகோதரி மற்றும் என் மாமா மூன்று பேரும் கோயம்புத்தூர் செல்ல முடிவுசெய்து தி.நகரில் உள்ள விரைவுபேருந்து கவுண்டரில் எனக்கும் என் சகோதரிக்கும் ஒரு நாளும், அதற்கு அடுத்தநாள் என் மாமாவுக்கும் டிக்கெட் முன் பதிவுசெய்து, தி.நகரில் வண்டி வரும்போது ஏறிக்கொண்டு கோவைக்கு செல்ல முடிவு செய்து அதேபோல் மூன்று பேருக்கும் டிக்கெட் புக் செய்யப்பட்டது. நானும் என் சகோதரியும் தி.நகரில் பேருந்து வந்ததும் ஏறினால் நான் முன்பதிவு செய்து இருந்தும் அந்த சீட்களில் வேறு இருவர் அமர்ந்து இருந்த னர். கண்டக்டரிடம் சீட் காண்பித்து எவ்வளவு சொல்லியும் அவர்கள் எழுந்த பாடில்லை

அந்த ஆண்டுதான் காவல்துறையினர், பிரிட்டோ என்ற காவல்துறை ஊழியர்கள் தலைமையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கண்டக்டர் நிலை மோசமாக இருந்தது. பின்னர் என் சகோதரியை மட்டுமே முதலில் உட்கார வைத்தேன். பின்னர் நான், தாம்பரம் வரை நின்று கொண்டு அதன்பின்னர் நானும் அமர்ந்து கொண்டேன். என் சீட்டுக்கு பின் சீட்டில் இருந்தவர் என்னை பற்றி விசாரித்து, வேலை தேடும் நபர் என்பதால் பொதறிவு கேள்விகள் கேட்க எல்லாவற்றிற்கும் பதில் தெரிவித்தேன்.

அப்போதுதான் இந்தியாவின் இரண்டாவது மற்றும் நான்காவது பிரதமர் பற்றி கேட்டார். நானும் பதில் சொன்னேன். விடை கட்டுரை இறுதியில் தெரிவிக்கிறேன். அடுத்த விஷயம் பஸ் டிக்கெட் 30 பைசா கூடுதலாக‌ வாங்கியதாக கண்டக்டர் தெரி வித்து இரண்டு டிக்கெட்டுகளுக்கு 0/60 பைசா திரும்ப வாங்குமாறு தெரிவித்தார். அதேபோல் என் மாமா மறுநாள் வரும்போது அவரிடமும் 0/30 பைசா திரும்ப வாங் கிக்கொள்ளும்படி தெரிவித்தனர். திரும்ப வரும்போது டிரெயின் மூலம் சென்னை வந்து சேர்ந்தோம். சென்னை வந்ததும் அரசு விரைவு போக்கு வரத்து கழக அலுவல கம் சென்று 3 டிக்கெட்கள் மற்றும் ஒரு மனு எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன்.

அதன் பின்னர் தி.நகர் அலுவலக புக்கிங் கிளார்க் சுமார் 4 நாட்கள் என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்து 0/90 பைசா திரும்ப கொடுக்க அலைந்தார் மனுஷன்.நான் அப்போது தற்காலிக வேலை பார்த்ததால் காலை 9.00 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினால் திரும்பி வர இரவு7/00 மணி ஆகும். அதன் பின்னர் ஒரு நாள் அந்த ஊழியருக்காக காத்திருக்க பிறகு என்னிடம் அதிகம் பெற்ற 0/90 பைசா பெற்றுக் கொண்டதாக என் மனுவில் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றார். அதாவது அரசு பஸ் டிக்கெட் விலை குறைந்தது தி.நகர் அலுவலகத்திற்கு தகவல் வர தாமதமானதால் இந்த பிரச்சினை. மேலும் அந்த ஊழியர் டிசம்பர் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். ஒரு வழியாக இந்த பிரச்சினை முடிந்தது.ஊழியர் டிசம்பர் 31 இரவு சுமார் 8/00 மணிக்கு என் வீட்டுக்கு வந்து ஓய்வூதிய ஆணை காண்பித்துவிட்டு சென்றார்.

கேள்விக்கான விடை: 

இரண்டாவது மற்றும் நான்காவது பிரதமர்: திரு.குல்சாரிலால் நந்தா

திரு.குல்சாரிலால் நந்தா

கடந்த 1964-ல் பிரதமராக இருந்த நேரு மறைந்தபோது, இடைக்கால பிரதமராக திரு.குல்சாரிலால் நந்தா தேர்ந்தெடுக்கப்பட்டு, 13 நாட்கள் பதவியில் இருந்தார். 1964-ல் பிரதமராக இருந்த, லால்பகதுார் சாஸ்திரி மறைவிற்கு பின்னும்,  இடைக் கால பிரதமராக திரு.குல்சாரிலால் நந்தா 13 நாட்கள் பதவியில் இருந்தார்.

=> பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307

#Gulzarilal #Nanda #GulzarilalNanda #குல்சாரிலால்நந்தா #குல்சாரிலால் #நந்தா #PrimeMinister#PM

Leave a Reply