தன்னை கிண்டலித்தவரை களங்கடித்த நடிகை ஆத்மிகா
தன்னை கிண்டலித்தவரை களங்கடித்த நடிகை ஆத்மிகா
நடிகை ஆத்மிகா, தமிழில் மீசைய முறுக்கு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான
இவரது புகைப்படத்தையும் சினிமாவில் ஆண் நடிகர்கள் பெண் வேடமிட்ட கதா பாத்திரங்களின் முகங்களையும் சேர்த்து கிண்டலாக `பெண்கள் தின வாழ்த்துகள்’ என்று பதிவிட்டு ஒரு மீம் வெளிவந்தது. இந்த மீமை தன் சமூக வலைதளப்பக்கத் தில் பதிவிட்டு, இந்த மீமை தயாரித்தவருக்கு ஒரு கடுமையான பதிவை ஆத்மிகா பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில்,
இதுபோல் அசிங்கமான சிந்தனையோட உன்னைச் சிறுவயதிலிருந்து இப்படி வளர் க்கப்பட்டு இருக்கிறாயே என்று வருத்தப்படுகிறேன். கடவுள் எங்களைப் படைத்த விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒவ்வொருவரும் அவரவர் விதத் தில் அழகுதான். ஆண்களை அவர்களின் தோற்றத்தை வைத்து நாங்கள் மதிப்பிடு வதில்லை. உங்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள்’’ எனப் பதிவிட்டிருந்தார். ஆத்மிகாவுக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
#Aathmika #நடிகை #ஆத்மிகா