Wednesday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாடாளுமன்றத் தேர்தல் – 2019 – தேர்தல் நடத்தை விதிமுறைகள் – உடனடி அமல்

நாடாளுமன்றத் தேர்தல் – 2019 – தேர்தல் நடத்தை விதிமுறைகள் – உடனடி அமல்

நாடாளுமன்றத் தேர்தல் – 2019 – தேர்தல் நடத்தை விதிமுறைகள் – உடனடி அமல்

மோடி தலைமையிலான நடப்பு பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வரும்

ஜூன் 3-ம் தேதி முடிவடைவதால், அதற்கு முன்பாகவே நாட்டில் உள்ள 543 பாராளு மன்றத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்திமுடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமா க செயல் பட தொடங்கியிருக்கிறது. இப்பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்ட‍ங்களாக‌ நடைபெறவிருப் ப‍தாகவும், வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறவிருப்ப‍தாகவும் தேர்தல் ஆணையம் நேற்று (10.03.2019) மாலை முறைப்படி அறிவித்தது.

1) ஏப்ரல் 11ம் தேதி – 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும்

2) ஏப்ரல் 18-ம் தேதி – 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கும் (இந்த தேதியில்தான் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைபெற விருக்கிறது)

3) ஏப்ரல் 23-ம் தேதி 14 மாநிலங்களில் 115 தொகுதிகளுக்கும்

4) ஏப்ரல் 29-ம் தேதி 9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கும்

5) மே 6-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கும்

6) மே 12-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளிலும்

7) மே 19-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளிலும்

வாக்கு பதிவு நடைபெற இருக்கிறது. இறுதியாக வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றிய விவரம் வருமாறு:-

1. புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பை வாய்க்கு வந்தபடி அள்ளி வீசக்கூடாது.

2. மக்களுக்கு எந்தவித நிதி உதவிகளையும் எந்த வழியிலும் வழங்குவதாக‌ அரசு அறிவிக்கக்கூடாது.

3. புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை வரை அனுமதிக்கக்கூடாது.

4. அமைச்சர்கள் தங்கள் அலுவலக பயணத்தை தேர்தல் பணியோடு இணைக்கக் கூடாது.

5. அரசு அல்லது அரசியல் கட்சிப் பணியாளர்கள் யாரும் சாலை வசதி, குடிநீர் வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கக்கூடாது.

6. அரசுப்பணி அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் எந்தவித தற்காலிக அல்லது நிரந்தர பணி நியமனத்தை, பதவி உயர்வை அரசு அளிக்கக்கூடாது.

7. அமைச்சரோ அல்லது அரசியல் நிர்வாகிகளோ எந்த திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டக்கூடாது. எந்தவித திட்டத்துக்காகவும் தொடக்க விழாக்களை நடத்தக் கூடாது.

8. அமைச்சர்கள் தேர்தல் பணிக்காக, அரசுக்கான அம்சங்களை பயன்படுத்தக் கூடாது. அரசு வாகனம், சுழல் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது.

9. சாதி, மத உணர்வுகளை வாக்குக்காக பயன்படுத்தக்கூடாது.

10. பிரசாரத்தில் குற்றச்சாட்டுகள் அனைத்துமே, அடுத்த கட்சியின் கொள்கைகள், திட்டங்கள், பழைய பதிவுகள், பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும்.

11. சாதி, மதம் தொடர்பான உணர்ச்சியை தூண்டும் விதத்தில் செயல்படக்கூடாது.

12. அரசு திட்டங்களில் குறிப்பிட்ட அரசியல் தலைவரின் பெயர், படம் இடம் பெறக் கூடாது. அப்படி இடம்பெறும் பெயர், படத்தை மறைக்க வேண்டும்.

13. அரசு பணத்தை செலவழித்து ஆளுங்கட்சியினர் விளம்பரம் செய்யக்கூடாது.

14. கோவில், மசூதி, தேவாலயங்களை அரசியல் பிரசார ஸ்தலமாக பயன்படுத்தக் கூடாது.

உட்பட பல நடத்தை விதிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம், தனது இணைய தளமான‌ www.elections.tn.gov.in-ல் வெளியிட்டுள்ளது. விரும்புவோர் பார்வையிட லாம்.

#Parliamentelection  #ParliamentElection #2019 #Parliament #Election #பாராளுமன்றம் #மக்க‍ளவைதேர்தல் #நடத்தை விதிகள்

Leave a Reply

%d bloggers like this: