Monday, August 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாளையே திருமணம் செய்ய தயாராக உள்ளேன் – நடிகை அதிரடி

நாளையே திருமணம் செய்ய தயாராக உள்ளேன் – நடிகை அதிரடி

நாளையே திருமணம் செய்ய தயாராக உள்ளேன் – நடிகை அதிரடி

பொதுவாக திரை உலகில் நடிகைகளை விட நடிகர்களே அதிக

வருடங்கள் நிலையாக நின்று வெற்றி வாகை சூடி வருகிறார்கள் என்ற மாயத் தோற்றத்தை போட்டு உடைத்த முதல் நடிகை, நடிகை திரிஷா ஆவார். ஜோடியில் தொடங்கி, இன்றுவரை தொடர்ச்சியாக கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் தெலுங்கு திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டி வருபவர் நடிகை த்ரிஷா. இவரும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள‍ இருப்ப‍தாகவும் கிசுகிசுக்க‍ப்பட்ட‍து. அதன்பிறகு த்ரிஷாவுக்கு தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் சில பல காரணங்களால் அந்த‌ திருமணம் நடைபெற வில்லை.

இந்நிலையில், திரைப்படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்துவரும் அவர் சமீபத்தி ல் தனது திருமணம் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது : திருமணத்தில் நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். இப்போது யாரை யும் காதலிக்கவில்லை. எனக்கு பிடித்த‍ சரியான மனிதரை சந்தித்தால் நாளையே கூட திருமணம் செய்ய தயாராக உள்ளேன். திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு கண்டிப்பாக அந்த தகவலை அனைவருக்கும் சொல்வேன் என தெரிவித்துள்ளார்.

#Trisha #Karthiga  #Marriage #Wedding #LifePartner #Wife #Husband #Couple  #திரிஷா #த்ரிஷா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: