Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாரிசு அரசியலைத் தொடங்கியதே பெருந்தலைவர் காமராஜர்தான்

வாரிசு அரசியலைத் தொடங்கியதே பெருந்தலைவர் காமராஜர்தான்

வாரிசு அரசியலைத் தொடங்கியதே பெருந்தலைவர் காமராஜர்தான்

தற்போது நாடாளுமன்றத் தேர்தலோடு, 18 சட்ட‍மன்றத் தொகுதிகளுக்கும்

இடைத்தேர்தல் அடுத்த‍ (ஏப்ரல்) மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் கார ணமாக இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க‍த் தொடங்கியுள்ள‍து. கூடவே வாரிசு அரசியல் என்ற சர்ச்சை பெரும் புயலை கிளப்பி வருகிறது. திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட‍ அனைத்து கட்சிகளிலும் வாரிசு அரசியல் செய்கிறார்கள் என்ற சூறாவளி , எப்போதும் இல்லாதளவுக்கு பெரும் அசுரவேகத்துடன் வீசுகிறது. அந்த வாரிசு அரசியலை யார், எப்போது கொண்டு வந்தார் என்பதை என் சிற்ற‍றிவுக்கு எட்டியவ ரை சிந்தித்து, எழுதுகிறேன்.

என்ன‍து பெருந்தலைவர் காமராஜர், திருமணமே செய்துகொள்ளாமல், தனது வாழ் நாளை இந்திய மக்க‍ளுக்காகவும், தமிழர்களுக்காகவும் தியாகம் செய்த அப்பழுக்க‍ற்ற‍ அரசியவாதி, ஏழைகளின் பங்காளன் ஆயிற்றே என்றெல்லாம் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான். ஆனாலும் நான் இன்னும் அழுத்த‍ம் திருத்த‍மாக சொல்கிறேன் வாரிசு அரசியலைக் கொண்டு வந்ததே பெருந்தலைவர் காமராஜர்தான்.

1966-ல் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி இருந்தார். அவர் மேற் கொண்ட‌ ரஷ்ய பயணத்தின்போது திடீர் மரணமடைந்தார். அவரது மரண‌த்தினால் ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையை சமாளிக்க‍வே மறைந்த முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் மகள் (வாரிசு), இந்திரா காந்தியை இந்தியாவின் பிரதமராக கொண்டுவந்தார். திருமதி இந்திராகாந்தி, நேரு உயிரோடு இருந்தபோதே அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்றவர், மேலும் அரசியல் குறித்த‍ விவரமறிந்தவர். மேலும் இந்திராகாந்தியை நேருவின் மகள் என்ற ஒரே காரணத் திற்காக மட்டுமே காமராஜர் பிரதமராக அமரச் செய்யவில்லை. இந்திரா காந்திக்கு பிரச்சினைகளை எதிர்கொண்டு துணிச்ச‍லுடன் அதனை வெற்றிக் காணும் திறமை மிக்க‍வர் என்பதை அறிந்தே காமராஜர், நேருவின் வாரிசாக‌ இந்திரா காந்தியை அரசியலுக்கு கொண்டு வந்ததோடு அல்லாமல் பிரதமராகவும் அமரச் செய்தார். இப்போது சொல்லுங்கள் வாரிசு அரசியலைத் தொடங்கியது பெருந்தலைவர் காமராஜர்தானே.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

#பெருந்தலைவர் #காமராஜர் #Perundhalaivar #Kamarajar #இந்திராகாந்தி #Indragandhi #பிரதமர் #பண்டித_ஜவஹர்லால்_நேரு #Prime_Minister  #PM #vidhai2virutcham 

Leave a Reply