Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உப்பு, உண்ணும் உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால்

உப்பு, உண்ணும் உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால்

உப்பு, உண்ணும் உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால்

எப்போதும் சாப்பிட்டாலும் எதைச் சாப்பிட்டாலும் எதையும் அளவோடு

சாப்பிட்டால் உடலுக்கும் உள்ள‍த்துக்கும் நன்மையே பயக்கும். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். அமிர்தமே நஞ்சாகும் என்றால் உப்பு அதிகமானால் என்னாகும் என்று உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.

உப்பு சேர்த்த‍ உணவு வகைகளை கடைகளில் விற்கப்படுகிறது அத் தகைய உணவு வகைகளை வாங்கிச் சாப்பிடும் போதும் சரி, வீட்டிலேயே சமைத்த உணவில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக உப்பு சேர்த்து சாப்பிட்டாலும் சரி, உடலுக்கு நிச்ச‍யம் கேடு விளைவிக்கும் என்பது யதார்த்த‍மான உண்மையே அத்தகை கேடுகளில் ஒன்றினை இங்கு காணவிருக்கிறோம்.

நாம் உண்ணும் உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிட்டால், நமது உடம்புக்குள் உப்பு அதிகமாகும். அவ்வாறு உப்பு நமது உடம்புக்குள் அதிகமானால், அந்த உப்பில் இருக்கும் சோடியம் என்ற பொருளானது நமது உடலில் இயற்கையாக சுரக்கும் ரெனின், ஆஞ்சியோடென்சின் சுரப்பதை அதிகப்படுத்தி விடும். இதன் காரணமாக நமது ரத்தக் குழாய்கள் ஒரேயடியாகச் சுருங்கிவிடும் அவ்வாறு சுருங்கும்போது ரத்தத்தின் அழுத்தம் அதிகரிக்கும். இரத்த‍ அழுத்த‍ம் அதிகரிப்பால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் ஏற்படுகிறது.

ந‌மது உடம்புக்குள் உப்பு அதிகரிக்கும்போது, அந்த உப்பில் இருக்கும் அதீத அளவு சோடியம் நமது உடல் செல்களிலுள்ள தண்ணீரை ரத்த ஓட்டத்துக்கு கொண்டு வந்து விடும். இதனால் ரத்தத்தில் தண்ணீர் அளவு அதிகமாகி, அதில் அழுத்தம் அதிகரித்து விடும். இதன் விளைவாலும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இப்படி இன் னும் பலவழிகளில் உடலில் உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

ஆகவே உப்பு அதிகம்சேர்த்து சமைத்த உணவுகளான ஊறுகாய், கருவாடு, அப்பளம். உப்புக்கண்டம், வடாகம், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், சேவு பதப்படுத்தப்பட்ட உணவு, பாக்கெட் உணவு, துரித உணவு, செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்ப‍து என்பது நமது உடலுக்கும் உள்ள‍த்துக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்.

#உப்பு #salt #FastFood #Popcorn #Chips #DryFish #Appalam #UppuKandam #ArtificialFood #FriedFood #vidhai2virutcham #Pickle #ஊறுகாய் #கருவாடு #அப்பளம் #உப்புக்கண்டம் #வடாகம் #சிப்ஸ் #சாஸ் #பாப்கார்ன்

Leave a Reply