Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாதங்கள் நமக்கு மிகச் சிறந்த "ஷாக் அப்சர்வர்' (Shock Observer) – விரிவான அலசல்

பாதங்கள் நமக்கு மிகச் சிறந்த “ஷாக் அப்சர்வர்’ (Shock Observer) – விரிவான அலசல்

பாதங்கள் நமக்கு மிகச் சிறந்த “ஷாக் அப்சர்வர்’ (Shock Observer) – விரிவான அலசல்

விதவிதமான பாதங்கள் குறித்து இங்கு நாம் விரிவாக 

காணலாம் வாருங்கள். ஒரு கட்டடத்தின் உறுதி, கம்பீரம் அதன் அடித்தளத்தில் உள்ளது. அதுபோல் மனித உடல் கட்டமைப்பில் பாதங்கள் என்ற அடித்தளம் முக்கியமானது. கம்பீரத் தோற்றத்துக்கும் கம்பீர நடைக்கும் பாதங்களின் அமைப்பு மிகமுக்கியம். நடை நன்றாக இருக்கவேண்டுமானால் பாதங்களில் குறைஇல்லாம ல் இருக்க வேண்டும். பாதங்கள் சயில்லை என்றால் நிற்பது, நடப்பது, ஓடுவது என எல்லாவற்றிலும் பிரச்சினைதான். நேராக நிற்கவும் ஸ்திரமாக நிற்கவும் பாதங்கள் இயல்பானதாக இருக்கவேண்டும். பாதங்கள் இறுக்கமாக (Rigid) இருக்கக் கூடாது. வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்கவேண்டும். பாதங்கள் நமக்கு மிகச் சிறந்த “ஷாக் அப்சர்வர்’ (Shock Observer)- ஆகச் செயல்படுகிறது. இனி பாதம் குறித்து விவான தகவல்கள்:-

வெவ்வேறு வடிவங்களில் தட்டையான பாதங்கள்:

பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள தோல் பகுதி 4 மில்லி மீட்டர் தடிமன் கொண்டது. மற்ற தோலைக் காட்டிலும் இது வித்தியாசமாக இருப்பதற்குக் காரணம், உடல் அதிர்வுகளை, எடையைத் தாங்கும் வகையிலும் அமைந்துள்ளதே ஆகும். நிற்கும் போதும் நடக்கும்போதும் ஓடும்போதும் நமது உடலின் எடை முழுவதையும் பாதங்கள் தான் தாங்குகின்றன.

பாதத்தில் மொத்தம் 28 எலும்புகள், 25 மூட்டுகள், 11 தசைகள் உள்ளன. நடப்பது, நிற்பது, ஓடுவது போன்ற செயல்களுக்குப் பாதத்தில் உள்ள வளைவுப் பகுதி (Longitudinal Arch) தான் காரணம். இந்த வளைவு இல்லை என்றால் ஸ்திரமாக நிற்க முடியாது. இந்த வளைவை மூன்று பிவுகளாகப் பிக்கலாம். பிறக்கும்போது இந்த வளைவு இருக்காது. குழந்தை நடக்க, நடக்க இந்த வளைவு ஏற்படும். பிறந்த குழந்தைக்கு இந்த வளைவு இல்லையே என்று கவலைப்படாதீர்கள். பாதங்களில் உள்ள இந்த வளைவு உள்பக்கம், வெளிப்பக்கம், முன்பாதத்தின் உள் பக்கம் என 3 பிவுகளாக உள்ளது. இந்த வளைவை Spring ligament சவ்வு எலும்பு பராமக்கிறது. பல்வேறு காரணங்களால் வளைவுப்பகுதி தட்டையான பகுதியாக மாறுவதையே தட்டைப் பாதங்கள் அல்லது சப்பைப் பாதங்கள் என்று கூறுகிறோம்.

இயல்பான பாதங்களின் நடுப்பகுதி சற்று உள் நோக்கி வளைந்திருக்கும். அப்படி இல்லாமல் சமமாக இருந்தால் அவை தட்டைப் பாதங்கள் என்று அழைக்கப்படுகி ன்றன. தட்டையான பாதங்கள் இருந்தால் நேராக நடக்க முடியாது. செருப்பு உள் பக்கமாக தேய்ந்திருப்பது, மூட்டு வளைந்திருத்தல் மூட்டுவலி, முதுகு வலி, கழுத்து வலி வருவதற்கு வாய்ப்பு அதிகம்.

தட்டையான பாதங்களால் பிரச்சினை என்ன?

பாதங்கள் தட்டையாக இருந்தால் ஒரே இடத்தில் நீண்டநேரம் நிற்க முடியாது. மற்றவர்களைப் போல் நடை இயல்பாக இருக்காது. பாதத்தில் அடிக்கடி வலி ஏற்ப டும். வேகமாக ஓட முடியாது. விளையாட்டு நிகழ்ச்சிகள். போட்டிகளில் பங்கேற்க முடியாது. எழ்ண்ல் இல்லாததால் மரம் ஏற முடியாது. மலை ஏற முடியாது.

கால் மூட்டுகளில் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி என எல்லா வலிகளும் வந்து சேரும். உடல் அமைப்பு மாறும்; நடை மாறும்.

தட்டையான பாதங்கள் ஏற்படக் காரணங்கள் என்ன?

1. சார்லி சாப்ளினைப் போல் முழுப் பாதங்களை வெளிப்புறமாக வைத்து நடப்பது;

2 முட்டிப் பகுதிகள் முட்டிக்கொள்வது;

3 குதிகால் நரம்பின் நீளம் இயல்பைவிடக் குறைவாக இருப்பது;

4. பிறவியிலேயே பாதிப்பு

போன்ற காரணங்களால் தட்டைப் பாதங்கள் ஏற்படுகின்றன.

இது தவிர வேறு காரணங்கள் உண்டா?

a) பழக்க வழக்கங்களால் தட்டை கால்கள் ஏற்படுவதுண்டு.

b) நீண்ட நாள்கள் படுக்கையில் இருத்தல்

c) பக்கவாதத்தால் பாதிக்கப்படுதல்

d) முதுமை ஆகியவற்றால் தட்டைக் கால்கள் ஏற்படலாம்.

தட்டையான பாதங்களைச் ச செய்ய சிகிச்சைகள் உண்டா?

அமைப்பு ரீதியான தட்டைப் பாதங்களுக்கு சிகிச்சை இல்லை. அறுவைச் சிகிச்சை மூலம் ச செய்யும் வாய்ப்பு உண்டு.

பழக்க வழக்கங்களால் ஏற்படும் தட்டைக் கால்களை

1) உடற்பயிற்சி

2) அல்ட்ராசவுண்ட் தெரப்பி

3) மின்தூண்டல் மூலம் தசைகளை வேலை செய்ய வைப்பது,

3) மெழுகு ஒத்தடம்

என நான்கு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன.

1. முன் விரல்களை சுருங்கி நீட்டுவது, கட்டை விரலால் எண்கள் மற்றும் எழுத்துக் களை எழுதுவது.

2. விரலின் உதவியால் ஒரு பொருளை கவ்வித் தூக்குவது,

3. மணலில் நடப்பது, உருண்டைக் குச்சியைக் கால்களால் உருட்டுவது,

4. முன்காலில் நிற்பது

ஆகிய நான்கு பயிற்சிகளைச் செய்தால் படிப்படியாக தட்டைக்கால்கள் மறைந்து வளைவு ஏற்படும்.

=> திருமதி தினமணி

#பாதங்கள் #ஷாக்_அப்சர்வர் #Shock Observer #தட்டையான_பாதங்கள் தட்டையான_பாதம் #Flat_Feet #Feet #Foot #vidhai2virutcham 

Leave a Reply

%d bloggers like this: