Wednesday, November 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

21 வயது இந்திய அழகியின் உள்ள‍ம் கவர்ந்த நம்ம‌ தமிழ் நடிகர்

21 வயது இந்திய அழகியின் உள்ள‍ம் கவர்ந்த நம்ம‌ தமிழ் நடிகர்

21 வயது இந்திய அழகியின் உள்ள‍ம் கவர்ந்த நம்ம‌ தமிழ் நடிகர்
க‌டந்த‌ மார்ச் மாதம்17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற

“ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா (Rubaru Face of Beauty International India)” என்கின்ற அழகி போட்டியில் இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த அபூர்வி சைனி (Apurvi Saini) கலந்து கொண்டு “ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019” என்ற பட்டத்தை வென்றார்.

21 வயது ஆகும் இவர், தனது 19ஆவது வயதில் மாடலிங் துறையில் கால் பதித்து “ரிலையன்ஸ் ஜுவேல்ஸ் மிஸ் இந்தியா சென்னை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா, பிரெஷ் பேஸ் சோசியல் ஸ்டார் போன்றவற்றில் பங்கேற்று பட்டத்தை வென்று ள்ளார். இவர் விளம்பர படங்களிலும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்து உள்ளார். தற்போது அபூர்வி சைனி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.

இவர் இந்தியா சார்பில், பிலிப்பைன்ஸில் நடத்தப்படும் “பேஸ் ஆப் பியூட்டி (Face Of The Beauty)” என்ற அழகு போட்டியில் இந்த வருட இறுதியில் கலந்துகொள்கிறார். தன்னுடைய நாடு சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும். என்னுடைய பட்டத்தின் மூலம் இந்த நாடு, மக்கள் மற்றும் என் பெற்றோர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பேன் என்றும், தற்போது பெரிய கனவுகளை கண்டு மக்களின் இதயத்தை வெல்ல வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இவருக்கு நடிப்பு, பாடல், நடனம் போன்றவற்றில் ஆர்வம் அதிகம் உண்டு. மேலும் இவருடைய உள்ள‍ங்கவர்ந்த ஹீரோ விஜய சேதுபதிதானாம் இவருடன் நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசை இருக்கிறதாம். ஆக‌. விரைவில் 21 வயது இந்திய அழகி, நிச்ச‍யம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாகும் காலம் வெகுதொலைவில் இல்லை எனலாம்.

#Apurvi_Saini #Vijay_Sethupathi #அபூர்வி_சைனி #விஜய்சேதுபதி #ரூபாறு_பேஸ்_ஆப்_பியூட்டி_இன்டர்நேஷனல்_இந்தியா #ரூபாறு_மிஸ்_இந்தியா_எலைட்_2019 #Rubaru_Face_of_Beauty_International_India #Rubaru_Miss_India_Elite_2019 #Face_Of_The_Beauty

Leave a Reply