Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாரடைப்பும் முட்டையின் மஞ்சள் கருவும் – அபாய சங்குதான்

மாரடைப்பும் முட்டையின் மஞ்சள் கருவும் – அபாய சங்குதான்

மாரடைப்பும் முட்டையின் மஞ்சள் கருவும் – அபாய சங்குதான்

அமெரிக்க ஆய்வாளர், ஆலென் அமெரிக்கர்களைக் கொண்டு நடத்திய

ஆய்வு ஒன்றில் ஒரு நாளைக்கு 2 முட்டைகள் சாப்பிடுவது, இதய நோய் மற்றும் முன் கூட்டியே மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணம் முட்டையின் மஞ்சள் கருவில் இரு க்கும் அதிகளவிலான கொழுப்பு. பெரிய முட்டை ஒன்றில் சுமார் 185 மிகி கொழுப்பு இருக்கும் என அமெரிக்காவின் விவசாயத்துறை கூறுகிறது. நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் கொழுப்பை உட்கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்து ரைக்கிறது.

சரி. நாம் எத்தனை முட்டைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்?

அந்த ஆய்வை இணைந்து மேற்கொண்ட ஆலென் வாரத்திற்கு மூன்று முட்டைக்கு மேல் சாப்பிடக்கூடாது. அதுவும் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டுமே உண்ணுமாறு முட்டை பிரியர்களுக்கு அவர் பரிந்துரைக்கிறார். மேலும் அவர், “முட்டை சாப்பிடுவதை முழுவதுமாக நிறுத்திவிட வேண்டும் என்று நான் கூற வில்லை. சரியான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறேன்.”

=> ரஞ்சிதா

#மாரடைப்பு #முட்டை #மஞ்சள்_கருவும் #அபாய #சங்கு #Heart_Attack #EggYolk #Egg_Yolk

Leave a Reply