Monday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அது இல்லாத ஒருத்தனோட எப்படி வாழ முடியும்? – வாரியார் சுவாமிகள்

அது இல்லாத ஒருத்தனோட எப்படி வாழ முடியும்? – வாரியார் சுவாமிகள்

அது இல்லாத ஒருத்தனோட எப்படி வாழ முடியும்? – வாரியார் சுவாமிகள்

இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களின் நினைவுகளை

போற்றும் வகையில் நமது இந்து சாஸ்திரப்படி அவர்களுக்கு தர்ப்ப‍ணம் கொடுத்து வருவது வழக்க‍மான ஒன்று. தர்ப்ப‍ணம் கொடுக்கும் புண்ணிய ஷேத்திரங்களில் கயாவும் ஒன்று. அந்த கயாவுக்கு ஒரு கணவனும் மனைவியும் சென்று தர்ப்பணம் செய்யும் போது அங்கிருந்த பண்டா அவர்களிடம் ஐயா கயாவிற்கு வந்தால் விருப்ப மானது எதையாவது விட்டுவிடவேண்டுமே. நீங்கள் எதைவிடபோகிறீர்கள் என கேட்டார். கணவனோ யோசித்துக் கொண்டே இருந்தார். பண்டா கேட்டார் கத்திரிக் காயை விட்டுடறீங்களா? எனக்கு அது ரொம்ப பிடிக்குமே. அப்ப கேரட்? அதுல சத்து நிறைய இருக்கே. சரி தக்காளியை விட்டுடறீங்களா? அது விலை குறைவு அதனால வேணும். அப்ப உருளைக் கிழங்கு? பூரிக்கு மசால் செய்ய வேண்டுமே. சலிப்பான பண்டா இப்ப எதைத்தான் விடப்போறீங்க என்று கேட்டார்.

கணவன் யோசித்து காசு பணம் செலவில்லாதது அது ஒண்ணுதான் என்று நினைத் துக் கொண்டே நான் மானத்தை விட்டுடறேன் சாமி என்றார். பண்டாவுக்கு மானம் என்றால் என்னவென்று தெரியாததால் அவர் சொன்ன படியே சொல்லி தர்ப்பணம் செய்தார். பின் மனைவியிடம் நீ எதையம்மா விடப்போகிறாய்? என்றார். அவள் கணவனை முறைத்தபடி நான் இந்த ஆளையே விட்டுடறேன் என்றாள். ஏம்மா? மனுஷன்னா மானம்தான் முக்கியம். அதுவே இல்லாத ஒருத்தனோட எப்படி வாழ முடியும்? என்றாள். இந்த நகைச்சுவை கதையை திருமுருக கிருபானந்த‌ வாரியார்  சுவாமிகள் (Thirumuruga Kripananda Variyar swamigal) அடிக்கடி சொல்வார்.

#Thirumuruga_Kripananda_Variyar_Swamigal , #திருமுருக_கிருபானந்த‌_வாரியார்_சுவாமிகள், #Thirumuruga #Kripananda_Variyar #Swamigal #திருமுருக #கிருபானந்த‌_வாரியார் #சுவாமிகள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: