Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேக்சிங் உங்களுக்கு நீங்களே செய்து கொள்வது எப்ப‍டி?

வேக்சிங் உங்களுக்கு நீங்களே செய்து கொள்வது எப்ப‍டி?

வேக்சிங் உங்களுக்கு நீங்களே செய்து கொள்வது எப்ப‍டி?

வேக்சிங், உடலில் தேவையற்ற முடிகளை தற்காலிகமாக நீக்கும் பிரபலமான ஒரு

முறையாகும். இது பெரும்பாலான இளம்பெண்கள் நினைப்பது போல் நவீன முறை அல்ல. எகிப்திய பெண்கள் தங்கள் உடலில் சிறு முடிகளை நீக்க பயன்படுத்திய பண்டைய முறையே ஆகும். ஷேவிங் செய்வது போல் அல்லாமல், வேக்சிங் முறை யில் முடி மீண்டும் வளர மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும். இது மற்ற முடிகளை நீக்கும் முறைகளில் சாத்தியம் இல்லை என்பதால் பெண்கள் இந்த முறையை அதிகம் விரும்புகின்றனர்.

வெதுவெதுப்பான அல்லது சூடான மெழுகு பயன்படுத்தி வேக்சிங் செய்வது பொது வான முறையாகும். இந்த முறையில் பயன்படுத்தப்படும் மெழுகில் முடிகளை இலகுவாக நீக்கக்கூடிய சர்க்கரை சேர்ந்து இருக்கும். இது குளிர் வேக்சிங்கை விட மிகவும் ஆற்றல் வாய்ந்த முறையாகும். பெரும்பாலான அழகு நிலையங்களில் செ ய்யப்படும் வேக்சிங்கும் இதுதான். குளிர் வேக்சிங்கில் பயன்படுத்தப்படும் மெழுகு எல்லா மருந்து கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடியது. இம்முறை பெரும்பாலா ன பெண்களால் வீட்டிலேயே செய்யப்படுவது.

செய்முறை

சருமத்தில் வளரும் தேவையற்ற முடியின்மீது, முடி வளரும் திசையை நோக்கி மெழுகை ஒரு மெல்லிய அடுக்காக பரப்ப வேண்டும். பின்பு ஒரு துணி அல்லது காகித துண்டு கொண்டு மெழுகு மேல் அழுத்தி, முடி வளரும் திசைக்கு எதிரான திசையில் மிக விரைவாகவும், வேகமாகவும் நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மெழுகு முடியை பற்றி இழுத்து, முடியை நீக்கி மென்மையான சருமத்தைப் பெற வைக்கிறது.

=> மலர்


#Waxing #Wax #மெழுகு #முடி #சருமம் #வேக்சிங் #vidhai2virutcham #HairRemoving #Hair

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: