கயல் ஆனந்தி, திருடியபோது கையும்களவுமாக பிடிபட்டு கதறி அழுத சம்பவம்
கயல் ஆனந்தி, திருடியபோது கையும்களவுமாக பிடிபட்டு கதறி அழுத சம்பவம்
இயக்குநர் நவீன் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இவர் ஏற்கனவே
‘மூடர் கூடம்’ படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஆக அலாவுதீனின் அற்புத கேமாரா என்ற இந்த படத்திலும் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். ஏப்ரல் 19ந்தேதி இப்படம் ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் இந்த படத்தில் வில்லனாக ஒரு முக்கிய கதாபாத் திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் முழுவதும் வெளிநாடுகளில் படமாக்க ப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.
இயக்குநர் நவீனுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். அதுவும் பிக்பாக்கெட் அடிக்கும் பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளார் ஆனந்தி. ஒரு காட்சியில் பிக்பாக்கெட் அடித்து அதாவது திருடிக்கொண்டு ஓடும்போது போலீஸில் கையும் களவுமாக பிடிபடுவது போல் ஒரு காட்சி இருக்கிறது. இதில் பயந்து போய் உண்மையிலேயே கதறி அழுதே விட்டாராம். அதன்பிறகே சகஜ நிலைக்கு வந்ததாக தகவல்.