Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சோற்றில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால்

சோற்றில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால்

சோற்றில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால்

உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப்

பொறுத்தவரை 100% பொருந்தும். ரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில்தான்.

ஜீரணத்தை எளிதாக்கும் ரசம், பல வைட்டமின் குறைபாடுகளையும், தாது உப்புக் குறைபாடுகளையும் போக்கிவிடுகிறது. அதுமட்டுமின்றி பசியின்மை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன சரியாகும்.

ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது.

வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றை குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.

=> வி.ராதிகா

#சோற்றில்_ரசம்_கலந்து_சாப்பிட்டு_வந்தால் #பூண்டு #பெருங்காயம் #மிளகு #சீரகம் #ரசம் #வைட்டமின் #தாதுஉப்பு #பசியின்மை #வயிற்று_உப்புசம் #சோர்வு #வாய்வு #ருசியின்மை #பித்தம் #சீரகம் #வயிற்று_உப்புசம் #தொண்டைக்_குழாயில்_உள்ள_சளி #ஆஸ்துமா #பெருங்காயம் #வயிறு #கோளாறு #வலிப்பு_நோய் #மூளை #கொத்துமல்லிக்கீரை #காய்ச்சல் #சிறுநீர் #குடல்_உறுப்பு #செரிமானக்கோளாறு #நீரிழிவு #சிறுநீரக்_கோளாறு #கறிவேப்பிலை #Rasam #RasamRice

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: