Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூங்குழலியாக நயன்தாரா – இயக்குநர் மணிரத்னம் பட‌த்தில் முதல்முறையாக

பூங்குழலியாக நடிகை நயன்தாரா – இயக்குநர் மணிரத்னம் பட‌த்தில் முதல்முறையாக

பூங்குழலியாக நடிகை நயன்தாரா – இயக்குநர் மணிரத்னம் பட‌த்தில் முதல்முறையாக

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைத் திரைப்படமாக எடுக்க‍

இயக்குநர் மணிரத்னம் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில வி‌ஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இந்த ‘பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுத் திரைப்படம் ஆகும்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், தெலுங்கு, இந்தி திரையு லகை சேர்ந்த நடிகர்களையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் இந்த படத்தில் ஒப்பந்தமாக வில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திரைப்படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வல்லவ ராயன் வந்தியத்தேவனாக கார்த்தி, பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் நடிக்கின்ற னர். இந்நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி யிருக்கிறார் மணிரத்னம். வந்தியத்தேவனை இலங்கைக்கு அழைத்துசென்று அருள்மொழி வர்மனை காப்பாற்றி தமிழகம் அழைத்து வரும் முக்கிய கதாபாத்திரமான பூங்குழலியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் தேர்வு இறுதிநிலையை எட்டியிருக்கும்நிலையில் படப்பிடிப்பை 3 மாதங்கள் முன்பாக செப்டம்பரில் துவங்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முதலில் கார்த்தி, ஜெயம்ரவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. மகாவீர் கர்ணா படத்தை முடி த்து டிசம்பரில் விக்ரம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணையவிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓன்றிரண்டு வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்க‍ப்படுகிறது.

#PonniyinSelvan #Nayanthara #Maniratnam #Vikram #JayamRavi #Karthi #Mohanbabu #KeerthiSuresh #AiswaryaRai #பொன்னியின்_செல்வன் #மணிரத்னம் #விக்ரம் #ஜெயம்_ரவி #கார்த்தி #மோகன்பாபு #கீர்த்தி_சுரேஷ் #ஐஸ்வர்யா_ராய் #நயன்தாரா #விதை2விருட்சம் #vidhai2virutcham #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: