Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அரசியலில் குதிக்கிறார் ஸ்ருதிஹாசன்

அரசியலில் குதிக்கிறார் ஸ்ருதிஹாசன்

அரசியலில் குதிக்கிறார் ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் அவர்களிடம், உங்கள் தந்தை கமலஹாசன் அரசியலில்

குதித்து, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் துவக்கி தற்போது நாடாளுமனறத் தேர்தலில் போட்டியிடுகிறார். உங்கள் தந்தையின் அரசியலை பார்க்கும்போது உங்களுக்கு அநத ஆசை வரவில்லையா? என்ற கேள்வி கேட்கப்படடபோது அதற்கு அவர் அளித்த பதில் இதோ

அரசியலுக்கு எனது தந்தை கமல்ஹாசன் வந்த பிறகு எனக்கும் ஆர்வம் ஏற்பட்டு ள்ளது. இதுவரை நம்மை சுற்றி நடப்பதை கவனிக்காமல் காலம் போய்விட்டது. இப்போது ஆழமாக எல்லாம் பார்க்கிறேன். நாடாளுமன்றம் என்றால் என்ன? ராஜ்ய சபை எல்லாம் தெரிந்துகொள்கிறேன். அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன். ஆனால் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு எனக்கு அனுபவமும், முதிர்ச்சியும் இல்லை. ஆனால் எனது தந்தை மாதிரி ஆட்கள் அரசியலுக்கு வருவது மிகவும் தேவை. அவருக்கு சமூக பிரச்சினைகளில் நல்ல தெளிவு இருக்கிறது. இளைஞர்கள், பெரியவர்களாக இருந்தாலும் சரி ஒரு புதிய மாற்றத்துக்காக ஓட்டுப் போட வேண்டும் என்பது எனது கருத்து இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.

ஆக, மக்கள் நீதி மய்யத்தில் கமல்ஹாசன் அவர்களின் மகள், ஸ்ருதி ஹாசன் விரைவில் இணைந்து அரசியலில் களம் காண்பார் என எதிர்பார்க்கலாம்.

#Shrutihaasan #Kamalhaasan #மக்கள்_நீதி_மய்யம் #கமல்ஹாசன் #ஸ்ருதிஹாசன் #அரசியல் #கமல் #MakkalNeedhiMayyam  #MakkalNeedhiMaiam #vidhai2virutcham #Politics

Leave a Reply