Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, குழந்தைப்பேறும் கிட்டாது, காம உணர்வும் இருக்காது – அதிர்ச்சி வீடியோ

புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, குழந்தைப்பேறும் கிட்டாது, காம உணர்வும் இருக்காது – அதிர்ச்சி வீடியோ

புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, குழந்தைப்பேறும் கிட்டாது, காம உணர்வும் இருக்காது – அதிர்ச்சி வீடியோ

சமீபகாலமாக, ஆண்களுக்கு நிகராக பெண்களும் புகைப்பிடிக்கும் பழக்கம் நாளுக்குநாள்

அதிகரித்து வருவது வேதனைக்குரிய தகவலாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக நமது தமிழ்நாட்டு பெண்களிடையே இப்பழக்கம் அதிகரித்து வருவது வேதனையின் உச்சமே.

புகைப்பிடிக்கும் பழக்கம் பொதுவாகவே ஆரோக்கியத்தை சீர்குலைத்து, அவர்களை மரணம் வரை கொண்டு செல்லும் மரணத்தின் தூதுவன் என்று சொன்னால் அது மிகையாகாது.

சிகரெட்டில் உளள அதாவது புகையிலையில் நிகோட்டின் என்கிற போதை ரசாயனம் இருக்கிறது. சிகரெட் புகை பெண்களின் உடம்பில் எந்த உறுப்பையும் விட்டுவைக்காமல் எல்லாத் திசுக்களை யும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொசுக்கிவிடும். அதிலும் குறிப்பாக இனப்பெருக்கத் திசுக்களை. உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மூளை சிறுத்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும். புகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.

புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும்.

கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில்செல்லும் சிகரெட்டிலுள்ள போதைப்பொருளான நிகோட்டின் குழந்தையின் நுரையீரலை நேரடியாகத் தாக்கி சிறுவயதிலேயே அக்குழந்தை ஆஸ்துமாவால் பீடிக்கப் பட காரணமாகின்றது.

=> மலர்


#சிகரெட் #கர்ப்பம் #காம_உணர்வு #பல்லோப்பியன் #குழாய் #நிகோட்டின் #நுரையீரல் #புகைப்பழக்கம் #கருமுட்டை #புகையிலை #Cigarette #Pregnancy #FallopianTube #Nicotine #Lungs #Smoking #Ovarian #Uterus  #NoSmoking #Sex #vidhai2virutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: