ரஜினியுடன் இணையும் (பாபநாசம் புகழ்) நடிகை நிவேதா தாமஸ்
ரஜினியுடன் இணையும் (பாபநாசம் புகழ்) நடிகை நிவேதா தாமஸ்
வரும் 10-ம் தேதி மும்பையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு, தொடங்கவிருககிறது. இத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். இணையத்தில் நேற்று முன்தினம் சமீபத்தில் நடைபெற்ற இந்த போட்டோஷுட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், லீக்கானதால், படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
லீக்கான இப்புகைப்படங்களின் மூலம், போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்புகைப்படங்களில் போலீஸ் உடையின்மேல் பிரவுன் நிற கோட்டு போட்டுக் கொண்டு, கையில் கத்தியுடன் ரஜினி கம்பீரமாக அமர்ந்திருக்கி றார். இதில், ரஜினி இளமையாகவும் தெரிகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா இணையவிருக்கிறார் மேலும் பாபநாசம் திரைப்படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸ் இந்த திரைப்படததில் ரஜினிக்கும் மகளாக நடிக்கவுள்ளார்.
Thagavelukku Nandri