Tuesday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரவில் தூங்கும்போது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை

இரவில் தூங்கும்போது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை

இரவில் தூங்கும்போது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை

இரவில் நாம் தூங்கும்போது நமது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை

ரத்த ஓட்டம் மேலும் கீழுமாக சுழன்று வேலை செய்து கொண்டே இருக்கும். அப் போது காலில் அழுக்குகள் இருப்பின் அவை பாதங்களில் உள்ள நுண் துளைகள் வழியாக உள் சென்று ரத்தத்தில் இணைய வாய்ப்பு அதிகம் உண்டு. நமது பாதங்க ளில் நமது கண்களுக்கு புலப்படாத துளைகள் ஏராளம் இருக்கும். உற்று நோக்கி னால் மட்டுமே அவை கண்களுக்குத் தெரியும். விரல் நகங்களில் உள்ள அழுக்கை நீக்குவது மிகமிக முக்கியம்.

ஆக, அப்படி இருக்கும் வேளையில் நமது கால் விரல்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் அது உடல் ஆரோக்யத்தை கண்டிப்பாக பாதிக்கும். அதனால்தான் அழகு நிலையங்களில் கல் உப்பை நீரில் போட்டு கொதி நிலைக்கு வந்த பிறகு அதில் கைகளை கால்களை ஊறவைத்து சுத்தம் செய்கிறார்கள்.

இதில் அழுக்குகள் நீங்குவதோடு கிருமி தொற்றுகள் விரல் நகங்களில் இருந்தால் உடலுக்குள் செல்லாமல் உப்பு கலந்த சூடான தண்ணீரில் வெளியேறி ஆரோக்கிய த்தை பாதுகாக்கிறது. நகங்களுக்கு பங்கஸ் வராமல் தடுக்கிறது. எப்போதும் நமது அதிகமான கவனத்தை கால்களுக்குக் கொடுத்தல் வேண்டும். பெரும்பாலும் விரல் நகங்களை நெயில் கட்டர் கொண்டு வெட்டிஎடுக்கலம். இவை தவிர்த்து கூடுதலாக நகங்களின் ஓரத்தில் இருக்கும் அழுக்கு, பாதங்களில் இருக்கும் வெடிப்பு எல்லாம் சேர்த்து அதை சரி செய்வதற்கான அக்கறையும் சேர்த்து எடுக்க வேண்டும்.

– தினகரன்


கால், விரல், நகம், நகங்கள், நெயில், நெய்ல், விதை2விருட்சம் #Toe #Feet #Nail #vidhai2virutcham

Leave a Reply