நானும், எனது அண்ணன் அழகிரியும் – மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின்
நானும், எனது அண்ணன் அழகிரியும் – மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின்
17ஆவது பாராளுமனற தேர்தலில், திமுகவின் கூட்டணி வெறறிபெற
நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற கோஷத்தை முன்வைத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் தனது கட்சி வேட்பாளர்களையும் , கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகையில்… நானும் எனது அண்ணன் அழகிரியும் மைத்துனர் செல்வமும், நமது பொருளாளர் துரைமுருகன், TR பாலு, இப்படி அனைவரும் கலைஞர் அவர்களுக்கு மெரினாவில் அண்ணாவின் அருகில் நினைவிடம் அமைப்பதற்காக தமிழக அரசிடம் முறையிட் டோம். அதில்கூட கீழ்த்தரமான அரசியல்செய்து மரணத்தில்கூட சித்திரவதை செய்த கூட்டம் எடப்பாடி கூட்டம். கலைஞரின் கடைசி ஆசையான அண்ணாவுக்கு பக்கத்தில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்பது அதில்கூட 6 அடி இடம் தர மறுத்தது எடப்பாடி அரசு. என்று பேசினார். இவர் மேடையில் பேசும் போது கண் கலங்கினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத தொண்டர்கள் வருத்த மடைந்தனர்.