Monday, August 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்கலங்கிய நடிகை ஆன்ட்ரியா – மேடையில் வேதனையோடு

வேதனையோடு மேடையில் கண்கலங்கிய நடிகை ஆன்ட்ரியா

வேதனையோடு மேடையில் கண்கலங்கிய நடிகை ஆன்ட்ரியா

நடிகை ஆன்ட்ரியா, வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து

‘தரமணி’, ‘அவள்’, ‘விஸ்வரூபம் 2’, ‘வடசென்னை’ போன்ற படங்களில் நடித்தார். இதை தொடர்ந்து, தில் சத்யா இயக்கும் ‘மாளிகை’ படத்தில் இளவரசியாகவும், போலீசாகவும் நடிக்க இருக்கிறார். ஆன்ட்ரியாவை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து ‘தில்’ சத்யா இயக்கிக் கொண்டிருக்கும் படம், ‘மாளிகை’. இப்படத்தில், அவர் காவல்துறை அதிகாரியாகவும், கடந்தகாலத்தின் இளவரசியாகவும் நடிக்க இருக்கிறார். படம்குறித்து ‘தில்’ சத்யா அளித்துள்ள பேட்டியில், ’ஆக்‌‌ஷன், பேன்டசி, ஹாரர் என மூன்று ஜானர்களில் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ரியா நடிக்கும் இளவரசி கதாபாத்திரம், பேன்டசி பகுதியில் இடம்பெறும். அது, 400 வருட ங்களுக்குமுன்பு நடக்கும் கதை. போலீசாக நடிக்கும் ஆண்ட்ரியா, ஒரு மாளிகைக் கு விசார ணைக்காகச் செல்கிறார். அங்கு, அவருக்கு கடந்தகால நினைவுகள் ஞாப கத்துக்கு வருவதில் இருந்து படம் அப்படியே போகும்“ என்று தெரிவித்திருக்கிறார். கன்னட நடிகர் கார்த்திக் ஜெயராம், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், மனோ பாலா, ‘ஜாங்கிரி’ மதுமிதா போன்ற நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள். படத்தின் டீசரை விஜய் ஆன்டனி வெளியிட்டு வாழ்த்தினார்.

இவ்விழாவில் நடிகை ஆண்ட்ரியா பேசியதாவது:

இப்படம் முதலில் கன்னடத்தில் உருவாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர், ‘ ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் உள்ளது. ஆகையால், தமிழில் எடுக்க வேண்டும்’ என்று சொன்னார். ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குநர் இருவரு க்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றியுள்ளதில் மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை. நான் நிறைய பெரிய இயக்குநர்களிடம் வேலை செய்திருக்கிறேன்.

‘மாளிகை’ படத்தின் அனுபவம் மிக முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதி கமுள்ள படத்தில் நடித்ததிற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு நன்றி. இப்படத்தில் நடிக்க முக்கியk காரணம் எனக்கு இரண்டு வேடங்கள் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்”. 

இவ்வாறு வேதனையோடு மேடையில் கண்கலங்கினார். நடிகை ஆன்ட்ரியா  

 

#actress #Andrea_Jeremiah #actress #Andrea #Jeremiah #ஆன்ட்ரியா #KS_ரவிகுமார், மனோபாலா, ஜாங்கிரி_மதுமிதா #ஆன்ட்ரியா_ஜெர்மையா #மதுமிதா #Madhumidha #Manobala 

Leave a Reply