புருவ முடி உதிர்வதற்கான சில காரணங்கள்
புருவ முடி உதிர்வதற்கான சில காரணங்கள்
முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த
கண்களுக்கு அழகு சேர்ப்பது கண் இமையும் புருவமும்தான். அந்த புருவத்தில் உள்ள முடிகள், சிலருக்கு உதிர்வது உண்டு. அது ஏன் என்ற காரணத்தை கீழே காணலாம்.
சிலருக்கு புருவ முடி உதிர்ந்து விரைவாகவே மெலிந்துவிடும். இதற்கு பிரதான காரணங்களாக அவர்களின் வயது, சக்தியின்மை, மன அழுத்தம் உள்ளிட்டவை சொல்லப்பட்டாலும் அவர்கள் தலையில் விழும் வழுக்கைபோல புருவத்தில்உள்ள முடிகளும் உதிரலாம். இதற்கான மருத்துவ காரணங்களாக தைராய்டு குறைபாடு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதற்கு உரிய மருத்துவரை அணுகி உரிய கவனத்துடன் தேவயான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.