Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மாநகராட்சி மன்ற  சட்டம் திருத்தப்பட்ட பின்னர், 1996ம் ஆண்டு நடந்த

சென்னை மேயர் தேர்தலில் முதல் முறையாக நேரடியாக மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை தளபதி மு.க.ஸ்டாலின் பெற்றார். மேயர் பதவியில் இருந்தபோது ஸ்டாலினுக்கு சென்னை மக்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்தது.

1. பெரம்பூரிலுள்ள ஆடு-மாடு இறைச்சிக்கூடம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்து வதைத் தவிர்க்கும் வகையில் நவீன முறையில் பராமரிக்கப்பட்டது.

2. துப்புரவுப் பணிக்களுக்கு முன்னுரிமை அளித்து சென்னை நகரத்தின் குப்பை அள்ளும் முறைகளை நவீனப்படுத்தினார். சுகாதாரம், பொதுகட்டுமானம், பள்ளிகள் என ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி சென்னை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார்.   

3. மேயராக செய்த சாதனைகளுக்காக “நவீன சென்னை மா நகரத்தின் தந்தை” என்று போற்றப்படுபவர் தளபதி மு.க. ஸ்டாலின். சிங்கார சென்னை என்ற முழக்கத்தை முன்னெடுத்து அதை மக்களிடையே பரவலாக்கினார். சென்னை நகரத்தின் சாலை கள் புதுப்பொலிவு பெற்றன

4. மிகப்பெரிய மேம்பாலங்களை கட்டி சென்னை நகரத்தின் நெரிசலுக்கு தீர்வு கண் டார். இவரது ஆட்சியில், 9 பெரிய மேம்பாலங்களும், 49 குறும்பாலங்களும் கட்டப் பட்டது. இதுதவிர 18 முக்கிய சந்திப்புகளில் பூங்காக்களும், நீரூற்றுகளும் அமைக் கப்பட்டன. 81 பூங்காக்கள் சுத்தப்படுத்தப்பட்டு முறையாகப் பராமரிக்கப் பட்டன. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான சென்னை மெரீனாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

சென்னை மாநகரில் மட்டும் 10 மேம்பாலங்கள்:

இதேபோல், சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்த வர் தளபதி ஸ்டாலின் மட்டுமே. அவரது பதவிக் காலத்தில், நெரிசல் மிகுந்த 10 சாலைகளில் மேம்பாலங்கள் கட்ட முடிவெடுக்கப்பட்டு, பதவிக்காலம் முடியும் முன்பே திறந்து வைக்கப்பட்டது.

அ. பீட்டர்ஸ் சாலை – கான்ரான் ஸ்மித் சாலை சந்திப்பு,

ஆ. பீட்டர்ஸ் சாலை – வெஸ்ட்காட் சாலை சந்திப்பு,

இ. பாந்தியன் சாலை – காசா மேஜர் சாலை சந்திப்பு,

ஈ. புரசைவாக்கம் நெடுஞ்சாலை – ஆண்டர்ஸ் சாலை சந்திப்பு,

உ. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை – இராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பு,

ஊ. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை – டி.டி.கே சாலை சந்திப்பு,

எ. டி.டி.கே.சாலை – சி.பி.ராமசாமி சாலை சந்திப்பு,

ஏ. சர்தார் பட்டேல் சாலை – டாக்டர் முத்துலட்சுமி சாலை சந்திப்பு,

ஐ. சர்தார் பட்டேல் சாலை – காந்தி மண்டபம் சாலை சந்திப்பு ஆகிய

ஒ. மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன.

மேம்பாலங்கள் கட்ட 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்த்து. ஆனால், மேம்பா லங்கள் திறந்து வைக்கப்பட்டபோது 30% நிதி மீதம் இருந்தது.தலைவர் ஸ்டாலின் அவர்களது நிர்வாகத் திறமை, நிதி மேலாண்மை ஆகியவற்றுக்கு இதுவே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தியாவில், இவ்வளவு குறுகிய காலத்தில் எந்த ஒரு மாநகராட்சியும் இத்தகைய மேம்பாலங்களை கட்டி முடித்ததில்லை. 10-வதாக கட்டிமுடிக்கப்பட்ட பெரம்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பாலம் பின்னர் திறந்து வைக்கப்பட்டது.

இன்று, சென்னை மக்கள் ஓரளவேணும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணி க்க முடிகிறதென்றால், அதற்கும் மு.க.ஸ்டாலின் மட்டுமே காரணம். தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் அயராத உழைப்பாலும் சாதனைகளின் பலனாகவும் 2001ம் ஆண்டு 2வது முறையாக அவர் சென்னை மக்களால் மீண்டும் மேயராக தேர்ந்தெடு க்கப்பட்டார். ஸ்டாலினின் சாதனைகளையும், வளர்ச்சியையும் பொறுக்க முடியாத ​ ஆனாலும் அப்போதைய ஆளுங்கட்சி, ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தை கொண்டு வந்த காரணத்தினால், தனது மேயர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டமன்ற உறுப்பினராக தனது பணியினை தொடர்ந்தார்.

https://www.dmk.in/mkstalin

#முக_ஸ்டாலின் #ஸ்டாலின் #மேயர் #மாநகர_தந்தை #நவீன_சென்னை_மா_நகரத்தந்தை #திமுக #திராவிட முன்னேற்றக் கழகம் #மேம்பாலம் #மேம்பாலங்கள் #ஆளுங்கட்சி #அண்ணா_அறிவாலயம் #பெரம்பூர் #ரயில்_நிலையம் #இறைச்சிக்கூடம் #விதை2விருட்சம் #MK_Stalin #Stalin #Mayor #Maangara Thanthai #DMK #Dravida_Munnetra_Kazhagam #Bridges #RulingParty #Anna_Arivalayam #Perambur #RailwayStation #Slaughter_House #vidhai2virutcham #Kalaigner #Karunanidhi , கலைஞர், கருணாநிதி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: