நடிகை வரலட்சுமியின் புயல் வேகத்தால் மிரண்டுபோன பிற நடிகைகள்
நடிகை வரலட்சுமியின் புயல் வேகத்தால் மிரண்டுபோன பிற நடிகைகள்
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய
மொழிப் படங்கள், டிவி நிகழ்ச்சி என பிசியாகவே உள்ள ஒரே நடிகை, நடிகை வரலட்சுமி மட்டுமே எனலாம். தனி கதாநாயகியாக ‘டேனி’, ‘வெல்வெட் நகரம்‘, ராஜபார்வை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவை தவிர பிக்பாஸ் ஐஸ்வர்யா, சுபிக்ஷா, ஆஷ்னா சவேரியுடன் கன்னித்தீவு, விமலுடன் கன்னிராசி, ஜெய்யுடன் ‘நீயா 2’, வைபவுடன் காட்டேரி, தெலுங்கில் சந்தீப் கிஷணுடன் தெனாலி ராமன் பி.ஏ.பி.எல்,
கன்னடத்தில் ரணம் எனப் பல படங்களில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நாயகி யாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் வீரக்குமார் இயக்கத்தில் தஷி இசைய மைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் `சேஸிங்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க மலேசியா வில் எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தமிழ்ப் புத்தாண்டையொட்டு வெளியிடப்பட்டது. ஆக்ஷன் திரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.
வரலட்சுமியின் இந்த புயல் வேகத்தால் பிற நடிகைகள் மிரண்டுபோயுளளதாக ஒரு தகவல்.