Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணவனும் மனைவியும் படுத்துறங்கும் முறைகளும் அவற்றிற்கான சுவாரஸ்ய காரணங்களும்

கணவனும் மனைவியும் படுத்துறங்கும் முறைகளும் அவற்றிற்கான சுவாரஸ்ய காரணங்களும்

கணவனும் மனைவியும் படுத்துறங்கும் முறைகளும் அவற்றிற்கான சுவாரஸ்ய காரணங்களும்

ஆணோ பெண்ணோ ஒருவர் தனியாக படுத்துறங்கும் முறையை வைத்து, அவரது

குணநலன்களை அறிந்திட முடியும் என்பது ஏற்கனவே நீங்கள் கேள்விப்பட்ட ஒன் றே. இப்போது கணவனும் மனைவியும் ஒன்றாக ஒரே படுக்கையில் படுத்துறங்கும் போது அவற்றிற்கான காரணங்களும், அதில் அவர்களுக்கு கிடைக்கும் சுகங்களை யும் பற்றியும் இங்கு சுருக்கமாக காணலாம்.

கணவன் மனைவி எப்படி படுத்து தூங்க வேண்டும்? அதில் என்ன மாதிரியான இன்பம் கிடைக்கும்?

1. கரண்டி நிலை (Spoon Position)

இளந்தம்பதியினர் பொதுவாக இந்நிலையில் தூங்குவர். இணையில் ஒருவர் பின்னே இன்னொருவர் நெருக்கமாக படுத்து அணைத்திருப்பது கரண்டி நிலை என கூறப்படுகிறது. இணையை பாதுகாக்கும் உணர்வோடும், இணைமேல் உரிமையை காட்டும் (possessiveness) தன்மையும் கரண்டி நிலையில் வெளிப்படும். உடல்கள் போதிய இடைவெளியோடு இணைந்து வசதியாக இணை ஒருவருக்கொருவர் நெருக்கத்தை காட்டும் வண்ணம் இந்நிலை அமைந்திருக்கும். பரஸ்பர நம்பிக்கை யையும், பிணைப்பையும் கரண்டி நிலை காட்டும்.

2. தளர்ந்த கரண்டி நிலை (Relaxed Spoon Position)

படுத்து உறங்கும் நிலைகளை சரியாக புரிந்து கொள்வதற்கு, எவ்வளவு நாள்களாக ஜோடிகள் இணைந்துள்ளனர் என்பதையும், வயது முதிர்வையும் கருத்தில் கொள்ள வேண்டும். புதிதாக திருமணமான தம்பதியரிடையே உடல் நெருக்கம் முக்கிய பங்கு வகிக்கும். ஒருவரையொருவர் நெருக்கமாக தழுவிக் கொண்டிருக்கவே விரும்புவர். அதன் பிரதிபலிப்பு தான் கரண்டி நிலை.

காலம் கடந்திடும்போது உடலளவிலான நெருக்கம் முதன்மைநோக்கில் இருக்கா து. கையால் தளர்வாக அணைத்துக்கொள்வதில், உடல்நெருக்கம் குறைகிறது. தூங்குவதற்கு இருவருக்கும் போதுமான இடம் கிடைக்கிறது. ‘உனக்கென்று நான் இருக்கிறேன்,’ என்பதை உணர்த்தும் இந்த வகை அணைப்பு, சமநிலையை வெளிப் படுத்துகிறது.

3. பின்னிப் பிணைந்த தழுவல் (Tangled Up Hugging)

இரவு முழுவதும் அணைத்துக்கொண்டு தூங்கும் இந்த நிலை அரிதானது. உறவின் தொடக்கத்தில் பெரும்பாலும் அனைத்து ஜோடிகளிடமும் காணப்படும் இந்நிலை யை சில இணைகள் வாழ்க்கை முழுவதும் தொடர்வதுண்டு. அதிக நெருக்கத்தை காட்டும் இந்நிலை உணர்வுப்பூர்வமானதும் கூட. இணைந்திடும் இருவருமே மற்ற வரிடம் பாதுகாப்பை உணர்ந்திடுவர். பின்னிப் பிணைந்த தழுவல் நிலையில் நீங்க ள் உறங்கினால், உங்கள் இணையிடம் இன்னும் இன்னும் பெற்றுக்கொள்ள விரும் புகிறீர்கள் என்றும், அவரையே நீங்கள் சார்ந்திருக்கிறீர்கள் என்றும் பொருள். மொத்தத்தில் தனியாக தூங்குவதற்கு உங்களால் முடியாது.

4. தளர்ந்த கட்டியணைப்பு நிலை (Cuddle and Relax Position)

நெருக்கம் மற்றும் சுதந்திரம் இரண்டும் சமரசம் செய்திருக்கும் நிலை இது. முதல் பத்து நிமிடங்களுக்கு இணை, ஒருவரையொருவர் இறுக்கமாக தழுவி படுத்திருந் து பின்னர் தங்கள் தங்கள் இடங்களில் சுதந்திரமாக உறங்கும் நிலையே தளர்ந்த கட்டியணைப்பு நிலையாகும்.

5. மார்பில் தலை சாய்த்த நிலை (head on chest position)

ஆணின் மார்பில் பெண் தலை சாய்த்தபடி கைகளால் தழுவிக்கொண்டு, கால்கள் பிணைந்தபடி உறங்கும் நிலை. ஒருவர் இன்னொருவர் மீது ஆழ்ந்த நம்பிக்கையை யும் சார்ந்திருக்கும் உணர்வையும் காட்டும் நிலை இதுவாகும். நேராக படுத்திருக்கு ம் இணை வலிமையையும் பாதுகாப்பையும் காட்டும் தருணத்தில், அவன் மார்பின் மீது சாய்ந்திருக்கும் இணை முழு நம்பிக்கையையும் விசுவாசத்தையும் காட்டுகி றது. உறவின் இனிமை அக்கறையின்மூலம் காட்டப்படுகிறது.

6. கால்கள் பிணைந்த நிலை (legs entwined position)

இணையுடனுள்ள பிணைப்பை ஆழமாக வெளிப்படுத்தும் நிலை. உடல் மொழியில் கால்களே உண்மையை பேசும் அங்கங்களாகும். தூங்கும்போது தன்னையறியா மலே கால்கள் உண்மையை பேசுகின்றன. கால்கள் பின்னிப் பிணைந்த நிலையில் இணை உறங்குமானால், இருவரும் முழு தனி மனிதர்களாக இருக்கும் இருவரும் ஒருவரிடமிருந்து மற்றவர் இன்னும் இன்னும் என்று வேண்டி விரும்பி பெற்றுக் கொள்வதன் அடையாளம் இது. தம்பதியரின் முழு ஒத்திசைவை விளக்கும் நிலை இது. இணை, மற்றவரிடமிருந்து மறுவினையை எதிர்பாராமல் கால்களை சுற்றி போட்டிருந்தால் அவர் உணர்வு மற்றும் பாலியல் சார்ந்த இணைப்பை வாஞ்சிக்கிறார் என பொருள்.

7. விரட்டிச் செல்லும் கரண்டி நிலை (chasing spoon)

மற்றவற்றைப் போலன்றி உறவின் இரகசியத்தை தன்னுள் கொண்டிருக்கும் நிலை இது. இதில் முதலில் கரண்டி நிலையில் ஆரம்பிப்பர். சிறிது நேரத்தில் இணையில் ஒருவர் விலகி, படுக்கையில் தன் பக்கமாக சென்று விடுவர். மற்றவர், அவரை தொடர்ந்து சென்று கரண்டி நிலையை மேற்கொள்ள விளைவர்.

ஒருவர் தமக்கென இடமுண்டாக்க விரும்பியபோதிலும் மற்றவர் தொடர்ந்து விரட்டிச் செல்வதால் இது சட்டவிரோதமான கரண்டி நிலை என்று ‘உறக்க நிலைகள்’ நூலின் ஆசிரியர் சாமுவேல் டங்கல் என்பவர் கூறியுள்ளார்.

விலகிச் செல்லும் இணையர், தனக்கு வசதியான நிலையில் தூங்குவதற்காக விலகிச் செல்லலாம் அல்லது துணை தன்னை விரட்டி வரவேண்டும் என்பதற்காக நகர்ந்து செல்லக்கூடும். இரண்டில் எது உண்மை என்பது சம்மந்தப்பட்டவருக்கே தெரியும்.

8. பின்பக்கங்கள் உரசும் நிலை (Backs Touching Position)


 

சுதந்திர தன்மை உள்ளுக்குள் உறைந்திருக்கும் இருவரை கொண்ட இணை இது. முகங்கள் வேறுவேறு திசைநோக்கி இருக்குமாறு, தங்கள் உடல்களின் பின் பக்கங் கள் ஒன்றுடன் ஒன்று உரசும்படி படுத்திருந்தாலும், ஒருவருக்கான இடத்தை இன்னொருவர் புரிந்து மதிப்பதை காட்டிடும் நிலை இதுவாகும். இணைப்பு மற்றும் பாலியல் தொடர்புக்கான விருப்பமும் தொக்கி நிற்கும் நிலை. அன்பினால் கலந்தி ருந்தாலும் இணையின் விருப்பத்தையும் அவருக்கான இடத்தையும் மெச்சிக்கொள் ளும் ஆளுமை நிறைந்தவர்களின் கூட்டு இது. உண்மையில் நமக்கு விலக்கம் தேவைதான்; ஆனால், நம் இணையிடமிருந்து அல்ல என்பதை காட்டுவது இந்த படுக்கை நிலை.

9. பின்பக்கங்கள் நோக்கும் நிலை (Back towards each other)

ஒருவரிடம் மற்றவர் சண்டையிட்டு விட்டு, ஈர்ப்பே இல்லாமல் விலகி படுத்திருப்ப தாக தெரிந்தாலும், தங்களுக்குள்ளாக வலிமையான, பாதுகாப்பான உறவு கொண் டிருக்கும் இணை இது. நெருக்கத்தை காட்டுவதற்கு உடல்ரீதியான இணைப்பு முக்கியமல்ல என்பதை உணர்ந்த இணை இது. இருவருமே சுதந்திரத்திற்கும் தங்களுக்கான இடத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பவர்கள்.

சிலசமயங்களில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் தம்பதியர் இந்நிலையி ல் படுத்து பின்னர் ஒப்புரவாகி பழைய நிலையில் தூங்குவர். இந்நிலை, சுதந்திரத் தை, பாதுகாப்பை, நெருக்கத்தை காட்டுவதாகும். இணையிலுள்ள இருவருக்கு மத்தியிலான உணர்வுப்பூர்வமான புரிந்துணர்வுக்கு இது அடையாளம்.

10. ஆதிக்கம் செலுத்தும் நிலை (domination of space)

இணையில் ஒருவரின்மேல் மற்றவர் முழு ஆதிக்கம் செலுத்தும் படுக்கை நிலை இது. கட்டிலின் தலைப்பக்கமாக தூங்குபவர் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துப வராக இருப்பார். சற்று தாழ்வாக உறங்குபவர் உறவில் இணக்கமாக தாழ்ந்து செல்பவராக, சுயமரியாதை பிரச்னைகள் கொண்டவராக இருப்பார்.

தங்கள் தலை மட்டம் சமமாக இருக்கும்வண்ணம் தூங்கும் இணை, ஒரே எண்ணம் கொண்டவராக இருப்பர். இணையில் ஒருவர் கொண்டிருக்கும் மிகுந்த தன்னம்பி க்கையையும் மற்றவரின் தன்னம்பிக்கை குறைவையும் வெளிச்சம்போட்டுக் காட்டும் நிலை இதுவாகும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல

#கணவனும்_மனைவியும்_படுத்துறங்கும்_முறைகளும்_அவற்றிற்கான_சுவாரஸ்ய_காரணங்களும், #கணவன், #மனைவி, #தம்பதி, #புருஷன் #பொண்டாட்டி, #சம்சாரம், #படுக்கை, #கரண்டி_நிலை, #Spoon_Position, #இணைமேல்_உரிமையை_காட்டும் #Possessiveness, #தளர்ந்த_கரண்டி_நிலை, #Relaxed_Spoon_Position, #பின்னிப்_பிணைந்த_தழுவல், #Tangled_Up_Hugging, #தளர்ந்த_கட்டியணைப்பு_நிலை, #Cuddle_and_Relax_Position, #மார்பில்_தலை_சாய்த்த_நிலை, #head_on_chest_position, #கால்கள்_பிணைந்த_நிலை, #legs_entwined_position, #விரட்டிச்_செல்லும்_கரண்டி_நிலை, #chasing_spoon, #பின்பக்கங்கள்_உரசும்_நிலை, #Backs_Touching_Position, #பின்பக்கங்கள்_நோக்கும்_நிலை, #Back_towards_each_other, #ஆதிக்கம்_செலுத்தும்_நிலை, #domination_of_space, #காதல், #காமம், #செக்ஸ், #உடலுறவு, #தாம்பத்தியம், #Husband, #Wife, #Couple, #Bed, #Sleeping_Methods #Love, #Sex #Thambathiyam

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: