Monday, July 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேலூரில் தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழகத்தில் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளநிலையில் இன்று மாலை

6 மணியுடன் பிரசாரம் முடிந்தது. இதனையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது. அதாவது, வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தது. தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி கையெழுத்திட்டதும் ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி ஒன்றில் தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மேற் கொள்ள பெருமளவு பணம் இறங்கியுள்ளது என கிடைத்த தகவலின் அடிப்படை யில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியதே இதற்கு காரணம்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வேலூர் தொகுதியில் தேர்தல் தடை செய்யப்பட்டாலும், இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#CancelElectionInVellore #வேலூரில் #தேர்தல் #ரத்து #தேர்தல்_ஆணையம் #அதிரடி  #வேலூர், #Cancel #Election #Vellore #ElectionCommissionOfIndia

Leave a Reply

%d bloggers like this: