Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா – வெளிவராத புதிய பின்னணித் தகவல்கள்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா – வெளிவராத புதிய பின்னணித் தகவல்கள்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா – வெளிவராத புதிய பின்னணித் தகவல்கள்

இயக்குநர் மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வனை இயக்கத்

தயாராகி வருகிறார். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில வி‌ஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. தற்போது இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இத் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் இப்படம் உருவாகி வருவது யாவரும் அறிந்ததே. இந்த திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். நயன்தாரா, கைநிறைய படங்கள் வைத்திருப்பதால் பொன்னியின் செல்வன் படத்திற்கு மொத்தமாக கால் ஷீட் கொடுக்க முடியாத நிலையில் உள்ளாராம். அதனால் நயன்தாரா மணிரத்னத் தின் படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். ஆனால் உண்மை அதுவல்ல. மணிரத்னத்தின் சமீபத்திய திரைப்படங்கள் அவ்வளவாக வெற்றியும் பெறவில்லை. பெரிதாக பேசப்படவுமில்லை. தான் இநத திரைப்படத்தில் நடித்தால், படம் எங்கே தோல்வியுற்று, தனது மார்க்கெட் போய்விடுமோ என்று அஞ்சுவதே காரணமாக சொல்லப்படுகிறது.

இதனைக் கேள்விப்பட்டு மூட் அவுட்டான மணிரத்னம், பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நயன்தாராவிடம் நடத்தி வந்த பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு அனுஷ்காவை அணுகியதாகவும், அவருக்கு ஓகே சொல்வார் என்று கூறப்படுகிறது.

#PonniyinSelvan #Nayanthara #Maniratnam #Vikram #JayamRavi #Karthi #Mohanbabu #KeerthiSuresh #AiswaryaRai #பொன்னியின்_செல்வன் #மணிரத்னம் #விக்ரம் #ஜெயம்_ரவி #கார்த்தி #மோகன்பாபு #கீர்த்தி_சுரேஷ் #ஐஸ்வர்யா_ராய் #நயன்தாரா #விதை2விருட்சம் #vidhai2virutcham #vidhaitovirutcham

Leave a Reply