சின்னத்தம்பி மீது கை வைக்கக் கூடாது – நடிகை (நந்தினி) காட்டம்
சின்னத்தம்பி மீது கை வைக்கக் கூடாது – நடிகை (நந்தினி) காட்டம்
90களில், பி. வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியாகி
பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சின்னதம்பி’. இந்த படத்தை ரீமேக் செய்யலாம் என்று ஒரு பேச்சு எழுந்தது. இதுபற்றி குஷ்புவிடம் ஒரு பேட்டியில் கேட்டதற்கு, ‘ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட படத்தை ரீமேக் என்ற பெயரில் கை வைக்கக் கூடாது. வட இந்தியாவில் இருந்து நடிக்க வந்த ஒரு நடிகை தமிழ் பேசி ஆடிப்பாடி சிரித்து, அழுதுபுரண்டு நடித்ததை வியந்து பார்த்தனர்.
அந்தளவுக்கு டைரக்டர் வாசு சார், சின்னத்தம்பி நந்தினி கதாபாத்திரத்தை செதுக்கி உருவாக்கி இருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முழுக்க முழுக்க நந்தினி தோளில் சுமத்தப்பட்டது. இன்னொரு முக்கியமான விஷயம் வேறு எந்த ஹீரோக் கள் நடித்து இருந்தாலும் என்னை அந்தளவுக்கு விட்டுக்கொடுத்திருக்க மாட்டார்க ள். பிரபு சார் அவரது ஹீரோயிசத்தை பெருந்தன்மையாகக் குறைத்துக் கொண்டார். நான் நடித்த நந்தினி கேரக்டரை எந்த நடிகையும் நடிக்கலாம். ஆனால், பிரபு சார், மனோரமா ஆச்சி நடித்த கேரக்டர்களில் யாரை நடிக்க வைப்பீர்கள்…?’. இவ்வாறு குஷ்பு கேட்டுள்ளார்.