Saturday, August 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உச்சந்தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்தால்

உச்சந்தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்தால்

உச்சந்தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்தால்

எல்லா விதமான கூந்தலுக்கும் ஏற்ற விதத்தில் விளங்கும் ஒரு

எண்ணெய் லாவெண்டர் எண்ணெய். லாவெண்டர் எண்ணெய்யில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பண்பு, உச்சந்தலையில் உண்டாகும் தொற்று பாதிப்பைப் போக்க உதவுகிறது. உங்கள் தலைமுடியில் உள்ள பொடுகைப் போக்கவும், அடர்த்தியான கூந்தலைப் பெறவும், லாவெண்டர் எண்ணெய் சிறந்த பலனைத் தருகிறது. ஒரு கண்ணாடி பாத்திரத்தில் லாவெண்டர் எண்ணெய் சிறு துளிகள் சேர்த்து, அதன் மேல் சிறிதளவு எக்ஸ்ட்ரா ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

பிறகு இறுக்கமாக அந்தப் பாத்திரத்தை மூடவும். மூன்று முதல் நான்கு வாரங்கள் இந்த எண்ணெய்யை அப்படியே மூடி வைத்திருந்து பின்பு, லாவெண்டர் எண்ணெய் ஊறிய அந்த எண்ணெய்யை எடுத்துப் பயன்படுத்தவும். அந்த லாவெண்டர் எண்ணெய்யை உங்கள் உச்சந்தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். ஒரு இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டு, அடுத்த நாள் காலை மிதமான மூலிகை ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். இப்படி செய்வதால் விரைவில் உங்களுக்கு நீளமான அடர்த்தியான பளபளப்பான கூந்தல் கிடைக்கும்.

#லாவெண்டர் #எண்ணெய் #பக்டீரியா #உச்சந்தலை #தொற்று #தலைமுடி #பொடுகு  #Lavender  #Oil #vidhai2virutcham #LavenderOil #Infection #Hair #Scalp #Bacteria 

One Comment

Leave a Reply to iniyan Cancel reply