Sunday, May 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்?

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்?

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்?

ஒருவர் சொத்திற்கு உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்து அவருக்கு பிறகு

யார் யாருக்கெலலாம் போகும் என்பதை இங்கு காண்போம். இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி, இது இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மதத்தினருக்கு வித்தியாசப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

திருமணமான ஆணின் சொத்துக்கு உரிமை: மனைவி, மக்கள் – தாய்

திருமணமான பெண்ணின் சொத்துக்கு உரிமை: கணவன் – பிள்ளைகள்.

திருமணமாகாத ஆணின் சொத்துக்கு உரிமை: – பெற்றோர்

திருமணமாகாத பெண்ணின் சொத்துக்கு உரிமை: – பெற்றோர்.

பெற்றோர்கள் இல்லையென்றால் இருதரப்புக்குமே சகோதர சகோதரிகள் சொத்துக்கு உரிமை கொண்டாடலாம்.

திருமணம் ஆகிவிட்ட ஓர் ஆணின் மனைவி, மக்கள் இறந்து விட்டால், அவருடைய மகன் அல்லது மகள் வயிற்று வாரிசுகளுக்கு நேரடியாக சொத்துப் போக நேரிடும்.

கணவர் இறப்பிற்கு அவரது மனைவியே காரணம் என்று சட்டத்தின் மூலம் நிரூபிக் கப்பட்டாலோ அல்லது கணவரது மரண வழக்கில் மனைவி சம்பந்தப்பட்டு இருந்தாலோ மனைவி கணவரது சொத்தில் பங்கு கேட்க முடியாது.

தாத்தா மற்றும் தந்தை சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு இணையாக பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது. நிலம், வயல் மற்றும் அசையா சொத்துகளை பெண்களும் பிரித்து கொள்ளலாம். ஆனாலும் பாரம்பரியமாக இருக்கும் வீட்டை சகோதரன் விரும்பும் வரை அவரின் சம்மதமில்லாமல் அதை விற்கவோ, விற்பனை செய்து பணம் கொடுக்க வேண்டும் என்றோ அடம் பிடிக்க முடியாது.

இந்த உரிமைகள் எல்லாம் தனிப்பட்ட முறையில் யாருக்குமே உயிலோ அல்லது பாகப்பிரிவினை செய்து வைக்காமல் இருந்தால் மட்டுமே பொருந்தும். உயில் எழுதி வைத்துவிட்டால் உயிலின் தன்மையை பொறுத்துதான் அந்த சொத்துக் களை பிரிக்க முடியும்.

முன்பே சொன்னது போல உயிலை எத்தனை முறையும் எழுதலாம். மாற்றி அமைக்கலாம். கடைசியாக எழுதிய உயிலே செல்லுபடியாகும். எனவே காலம் கடத்தாது உயில் எழுதுங்கள்.

=> சட்டநாதன்

#சட்டம், #செட்டில்மெண்ட், #உயில், #சொத்து, #உரிமையாளர், #வாரிசு, #மனைவி, #கணவன், #மகன், #மகள், #பிள்ளைகள், #வீடு, #நிலம், #நகைகள், #பணம், #செல்வம், #கோடி, #லட்சம், #ரூபாய், #கார், #ஆடம்பரம், #கடன், #தாய், #தந்தை, #அண்ணன், #தம்பி, #அக்கா, #தங்கை, #சகோதரர்கள், #சகோதரிகள், #விதை2விருட்சம், #வழக்கறிஞர், #நீதிமன்றம், #தானப்பத்திரம், #House, #Law, #Settlement, #will, #Property, #Owner, #Heir #daughter, #son, #daughter, #children, #house, #land, #jewelry, #money, #wealth, #crores, #lakhs, #rupees, #car, #loan, #mother, #father, #brother, #Brother, #sisters, #lawyer, #court, #donor, #vidhai2virutcham

One Comment

  • N.seeniraj

    ஐயா வணக்கம்.
    எனது தகப்பனார் பெயரில் காலியிடம் உள்ளது.அவர் பெயரில் பட்டா மட்டுமே உள்ளது.சுமார்1975 ஆண்டுகள் பத்திரங்கள் பதிவிட்ட எங்கள் மூதாதையர் இடம்.நாங்கள் நான்கு சென்ட் இடத்தினை மட்டுமே அன்று முதல் அனுபவித்து வருகின்றோம்.
    இதில் எங்களுடன் இடம் வாங்கிய மொத்தம் 16 பேர் கூட்டுப்பட்டாவாக உள்ளது.பத்திரம் எனது தந்தையின் பெயரில் இல்லாததால் அந்த இடத்தினை அளந்து தனிப்பட்டா பெறவோ,வாரிசுகளுக்கு மறுபதிவு செய்யவோ இயலவில்லை. இந்த இடத்தினை உயில் எழுதலாமா?
    இந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏதும் உண்ணா?

Leave a Reply