ஆன்மீகத்தில் நிவேதா பெத்துராஜ் – கிண்டலடிக்கும் சக நடிகைகள்
ஆன்மீகத்தில் நிவேதா பெத்துராஜ் – கிண்டலடிக்கும் சக நடிகைகள்
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ். இவர்
அமெரிக்கா வாழ் தமிழ்ப்பெண் ஆவார். இவர் தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் என்று தமிழ் படங்களில் நடித்து வரும் நிவேதா அடுத்து ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நான்கு தெலுங்குப்படங்கள், இரண்டு தமிழ்ப்படங்கள் என்று நிவேதா பெத்துராஜ் பிசியாக வலம் வருவதற்கு அவரது அர்ப்பணிப்பு உணர்வு தான் காரணம் என்கிறா ர்கள். நிவேதாவுக்கு தற்போது ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் எளிமையான வாழ்க்கையை கடைபிடிக்க தொடங்கியுள்ளார். இதனை கேள்விப் பட்ட சக நடிகைகளும், தோழியரும், இவர் விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு முழுக்க முழுக்க ஆன்மீகத்திலேயே தனது வாழ்நாளை கழித்து விடுவார் போலிருக்கிறதே என்று கிண்டல் செய்து வருவதாக ஒரு தகவல்.