ஏன்? அதிக நேரம் குளிக்கக்கூடாது
ஏன்? அதிக நேரம் குளிக்கக்கூடாது
வெயில் காலங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பதும், குளிர் காலங்களில்
வெந்நீரில் குளிப்பதும் உடலுக்கு வேண்டு மானால் இதமாக இருக்கலாம் ஆனால், அவை நம் சருமத்தைப் பாதிக்கும். இரண்டுமே நம் சருமத்திலுள்ள ஈரப்பதத்தை நீக்கி, வறட்சி யாக்கிவிடும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மட்டுமே உங்கள் சருமத்தில் சுரக்கும் இயற்கையான எண்ணெய்ப் பதத்தைத் தக்கவைக்கும்.
அப்படி குளிக்கும்போது சிலர் அதிகநேரம் குளித்தால்தான் உடல் சுத்தமாக இருக்கு ம் என நினைப்பார்கள். இது, தவறான நம்பிக்கை. உடலில் சுரக்கும் எண்ணேய் நம் சருமத்தைப் பாதுகாக்கக்கூடியது. அதிக நேரம் குளிப்பதால், அந்த எண்ணெய்ச் சுரப்புத் தடைப்படும். எனவே, 5 முதல் 10 நிமிடங்கள் மட்டும் குளிப்பதே போதுமா னது. சோப்பு மற்றும் ஷாம்பூ போடும் போது ஷவரை திறந்துவைக்கக் கூடாது. இதனால் மேனியையும் பாதுகாக்கலாம்; தண்ணீரையும் சேமிக்கலாம்.
=> மலர்