மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால்
மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால்
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற
திரைப்படப் பாடல் ஒன்று போதும் மல்லிகை மலரின் சிறப்புக்களையும் பண்புகளையும் சொல்ல, அப்பேற்பட்ட மல்லிகை மலரை தினந்தோறும் மங்கையர், தமது தலையில் சூடி வந்தால் அவர்களுக்கு அழகை மட்டுமல்ல அதன் மூலம் ஆரோக்கியத்தையும் பெற முடியும் அதுகுறித்து இங்கு காண்போம்.
மங்கையர், மல்லிகை மலரை, தினமும் தலையில் சூடிவந்தால் அது அந்த மங்கையரின் அழகை அதிகரிக்கும் செயலை செய்வதோடு அல்லாமல், அந்த மங்கையரின் மன அழுத்தம் முற்றிலும் கட்டுப்படும் இதன் காரணமாக அவர்களின் மலர் முகம் மலர்ந்து புன்னை சிந்தும். மேலும் அவர்களின் உடல் சூட்டினையும் குறைக்கும் என்கிறார்கள்.
=> சுவாசிகா