கர்ப்பிணிகள், தங்களது கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்…
கர்ப்பிணிகள், தங்களது கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்…
இரவு பகல் பாராது, கண் துஞ்சாது தனக்கு ஏற்படும் அசௌகரியங்களைக்கூட
சுகங்களாக ஏற்று, கிட்டத்தட்ட 300 நாட்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு ஈடு இணை ஏது. அப்பேற்பட்ட தாய்மார்கள் தங்களது கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில் மார்பகங்களைக் கவனித்தல் மிகவும் முக்கியமாகும். மார்பகங்கள் பெரிதாகும். ஆகவே இந்த கால க்கட்டத்தில் இறுக்கமான, தேவையற்ற அழுத்தத்தை அளிக்கும் பிராக்களை (துணி களை) அணியக்கூடாது. மார்பகங்கள் பெரியதாகவும் கனமானதாகவும் இருந்தால், அதனைத் தாங்குமாறு சரியான உள்ளாடைகளை அணிந்துகொள்ள வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்துகின்றனர்.