Wednesday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அட்சயத் திருதியை

அட்சயத் திருதியை ? ?

அட்சயத் திருதியை ஒரு வியாபார தந்திரமா?

அஷயம் என்றால் வளரும் என்று பொருள். வருடாவருடம் சித்திரை

மாதத்தில் அமாவாசைக்குபிறகு வரும் வளர்பிறை திருதியை அன்றுதான் அஷய திருதியை வரும். இந்த நன்நாளில் நிறைய நல்விஷயங்கள் செய்யவேண்டும். உதாரணமாக படிப்பு போன்றவைகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.

உதாரணமாக‌ பசு மாட்டிற்கு அகத்தி கீரை, புண்ணாக்கு போன்றவை வாங்கி தரலாம். படிக்கும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வகைகள் , எண்ணெய், நெய் போன்றவைகள் வாங்கி தரலாம்.

1989-90களில் தான் இந்த “பொன்” வாங்கும் வழக்கம் ஆரம்பித்தது. அதாவது விளம் பரங்கள்மூலம் பொதுமக்களை நகை வாங்க வைக்கும் உத்தியை வியாபாரிகள் ஆரம்பித்தனர். நான் 1989ல் தி.நகரில் உள்ள பிரபலமான நகைக் கடையில் நகை சீட்டு சேர்ந்தேன். 12மாதம் முடியும் சமயத்தில் நகை வாங்கும்போது ரசீது தேவையா என்று கேட்டார்கள். ரசீது என்றால் வரி வரும் என்றார் பரவாயில்லை பில் போட்டு கொடுக்க சொல்லி நகை வாங்கி வந்தோம்.

அதன்பிறகு இரண்டாவது வருடம் சீட்டு சேர்ந்த போது கடை முதலாளி அக்ஷய திருதியைப்பற்றிய விவரங்கள் வேண்டும் என்று சொல்லி அடுத்த வாரம் சனிக் கிழமை தி.நகரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் கூட்டம் நடந்தது.

திநகரில் இருக்கும் அனைத்து வகை வியாபாரிகளும் வந்து இருந்தனர். பெரியோர் களிடம் கேட்டு எனக்கு தெரிந்ததை சேர்த்து நான் கூட்டத்தில் பேசினேன். நகை வாங்க சொல்வது வியாபார தந்திரம் எனத் தெரிவித்தேன். பிறகு டிபன் சாப்பிட்டு விட்டு வந்தேன். அந்த வருடம் தி.நகரில் உள்ள இரண்டு புகழ்பெற்ற நகைக்கடையி ல் அக்ஷய திருதியை அன்று இலவசமாக எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இந்த வருடம் 5/5/2019 அக்ஷய திருதியை வருகிறது.

பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307


#அஷயதிருதியை #அஷய #திருதியை #அக்ஷயதிருதியை #அக்ஷய #Akshaya_thiruthiyai #Akshaya #Thiruthiyai #vidhai2virutcham 

Leave a Reply