கதறி கதறி அழுத சாய் பல்லவி – மேடையில் போட்டுடைத்த சூர்யா
கதறி கதறி அழுத சாய் பல்லவி – மேடையில் போட்டுடைத்த சூர்யா
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் உள்ளிட்டோர்
நடிக்கும் படம் என்ஜிகே (NGK) இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து ள்ளார். என்ஜிகே படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விழா நேற்று மாலை சென்னை யில் நடைபெற்றது இவ்விழாவில், சூர்யா, செல்வராகவன், சாய் பல்லவி, யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் S.R.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா, தான் சரியாக நடிக்கவில் லை எனக்கூறி கதறி கதறி அழுத சாய் பல்லவியை, இயக்குனர் செல்வராகவன் தான் தேற்றியதாகக் கூறினார். மேலும் “சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்த பிறகும் தான் நன்றாக நடித்திருக்கிறோமா? என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்பு உணவுடன் நடித்திருக்கிறார். நிறைய டேக் வாங்குகிறேனே என நினைத்து அழுவா ர். ஏதாவது ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றாலும் அழுவார். இன்னொரு டேக் கொடுத்தால்தான் சிறப்பாக நடிப்பேன் எனக்கூறி கதறிகதறி தேம்பி அழுவார். அப் போது செல்வராகவன்தான் அவரை ஆறுதல் கூறி தேற்றுவார். சாய் பல்லவிக்கு பாராட்டு இப்படிப்பட்ட ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகையை பார்ப்பது கஷ்டம். அவரது இந்த உழைப்பும், அர்பணிப்பும் தான் அவரை இந்த உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது”, என சூர்யா கூறினார்.