Monday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீரா ஜாஸ்மின்

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீரா ஜாஸ்மின்

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீரா ஜாஸ்மின்

த‌னது உருட்டு விழி கண்களாலும், துடிப்பான நடிப்பாலும்

தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, தென்னிந்திய ரசிகர்களைக் கட்டிப்போட்டவர். நடிகர் ஷியாமுடன் பாலா, நடிகர் மாதவனுடன் ரன் & ஆயுத எழுத்து, நடிகர் ஸ்ரீகாந்துடன் மெருக்ரி பூக்கள், நடிகர் விஜய்யுடன் புதிய கீதை, நடிகர் பிரசன்னாவு டன் கஸ்தூரி மான், அஜித்துடன் ஆஞ்சநேயா, விஷாலுடன் சண்டக்கோழி, புரட்சி கலைஞர் விஜயகாந்துடன் மரியாதை, எஸ்.ஜே சூர்யாவுடன் திருமகன், நடிகர் தனுஷுடன் பரட்டை என்கிற அழகு சுந்தரம், நடிகர் பிரசாந்துடன் மம்பட்டியான், நடிகர் பரத்துட ன் நேபாளி, கலைஞரின் புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட‍ பெண் சிங்கம், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி இயக்க‍த்தில் சிவப்பு மழை, கலைஞரின் இளைஞன், ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் பல முன்ன‍ணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக தெலுங்கு மற் றும் மலையாள திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர் மீரா ஜாஸ்மின்.

இவர் கடந்த 2014ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்ற பொறியாளரை திருமண ம் செய்து கொண்டு கணவருடன் துபாயில் வசித்து வருகிறார். திரைப் படங்களில் கவனம் செலுத்தாமல் உள்ள மீரா ஜாஸ்மின் கடந்தாண்டு நகைக்கடை திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது. காரணம் அந்த படத்தில் மீரா ஜாஸ்மின் குண்டாக இருந்தார்.

இந்நிலையில் தற்போது மலையாள இயக்குநர் அருண் கோபி துபாய்க்கு சென்ற இடத்தில் மீரா ஜாஸ்மினுடன் சேர்ந்து செல்பி எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மீரா ஜாஸ்மின் ஒல்லியாக உள்ளார். இவ்வளவு சீக்கிரம் உடல் எடையை வெகுவாக குறைத்து விட்ட மீரா ஜாஸ்மினை சில ரசிகர்கள் அவர் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்கள்.

இதனால், மிகவும் மனமகிழ்ந்து போன மீரா ஜாஸ்மின், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. மேலும் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பிரபல மலையாள இயக்குநரை அணுகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவி க்கின்றன• இதனை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் இருப்பதா க தெரிகிறது. மீரா ஜாஸ்மினின் துடுக்கத்தனமான நடிப்புக்கு நானும் ரசிகன்தான் அந்த வகையில் எனக்கும் இன்ப அதிர்ச்சியே!

#MeeraJasmine #மீரா_ஜாஸ்மின்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: