வீட்டு மனை வாங்கும்போது என்.ஓ.சி. (N.O.C. -No Objection Certificate) ன் தேவையும் முக்கியத்துவமும்
வீட்டு மனை வாங்கும்போது என்.ஓ.சி. (N.O.C. -No Objection Certificate) ன் தேவையும் முக்கியத்துவமும்
சொந்தமாக வீடு வாங்கி அதில் குடும்பத்தோட குடியேறி பரம்பரையாக
வசிக்க வேண்டும் என்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவருடைய கனவும் லட்சியமும் எனலாம்.
அந்த வகையில் வீட்டு மனை (House Plot) வாங்கும் போது அருகில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என்பதை ஆராய்ந்து பார்த்தே வா ங்க வேண்டும். ஏனென்றால், மனையோ நிலமோ குறிப்பிட்ட இடங்களுக்கு அருகில் இருந்தால், அதற்கெல்லாம் தடை யில்லாச் சான்றிதழ் (N.O.C. -No Objection Certificate) பெற வேண்டும்.
1. குளமோ, ஏரியோ 15 மீட்டர் தூரத்தில் இருந்தால், பொதுப் பணித் துறை (Public Works Department – PWD) அல்லது தொடர்புடைய துறைகளிடம் தடையில்லாச் சான்றிதழ் (N.O.C. -No Objection Certificate) பெற வேண்டும்.
2.ரயில்வே இருப்புப்பாதை (Railway Track)க்கு 30மீட்டர் அருகில் இருந்தால், ரயில்வே துறை (Railway Department)யிடம் தடையில்லாச் சான்றிதழ் (NOC -No Objection Certificate) பெற வேண்டும்.
3. குப்பைக் கிடங்கு அருகில் இருந்தால், உள்ளாட்சித் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் (N.O.C. -No Objection Certificate) பெற வேண்டும்.
4. மயானப் பூமி/ சுடுகாடுக்கு 90 மீட்டருக்கு அருகில் இருந்தால், சுகாதாரத் துறை அதிகாரியிடம் தடையில்லாச் சான்றிதழ் (N.O.C. -No Objection Certificate) பெற வேண்டும்.
5. கல்குவாரிக்கு 300 மீட்டர் தூரத்துக்குள் இருந்தால், சுரங்கத்துறையிடம் கட்டாய ம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும்.
6. விமான நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் மனை இருந்தால் விமான நிலைய ஆணையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (N.O.C. -No Objection Certificate) பெற வேண்டும்.
இவை மட்டும் போதாது. 30 ஆண்டுகளுக்கு வில்லங்கமில்லாச் சான்றிதழும் (N.O.C. – No Objection Certificate) அரசு வழக்கறிஞ ரின் சட்ட ஆலோசனையும் (Government Layer’s Advice) தேவை ப்படும்.
=> இந்து