நயன்தாராவுக்கு மகளாக நடித்த குழந்தை யார் தெரியுமா?
நயன்தாராவுக்கு மகளாக நடித்த குழந்தை யார் தெரியுமா?
தமிழ்த்திரையுலகில் தமிழ் சினிமாவில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன்
சிறு சிறு காமெடி ரோல்களில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் கொட்டாச்சி என்கிற மாரிமுத்து. தற்போது, இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் படங்களில் அவரைப் பார்க்க முடிவதில்லை.
ஆனால் இவரது மகள், மானஸ்வி தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். இந்த மானஸ்வி யார் தெரியுமா? இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நயன்தாராவுக்கு மகளாக நடித்தவர் இவர்தான். மானஸ்விக்கு வயது 6 ஆகிறது.
மேலும் எஸ்.டி கொரியர்ஸ், ஜிஆர்டி ஆகிய நிறுவனங்களின் விளம்பரங்கள் உட்பட பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், புதிய திகில் படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மானஸ்வி. ‘கண்மணி பாப்பா’ எனும் த்ரில்லர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் மானஸ்வி.
இந்த படத்தை தொடர்ந்து, த்ரிஷாவின் மகளாக ‘பரமபத விளையாட்டு’ படத்திலும் அவருக்கு மகளாக வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.