Tuesday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு

நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு

நாளொன்றுக்கு அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு

ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ(Tea)

குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மனநிலைக்கு கூட செல்கின்றனர். அதிகளவில் டீ குடிப்பதால்,

அதில் இருந்து வெளியாகும் அதிகளவிலான நச்சுக்களால் கவன சிதறல், அமைதி யில்லாமல் போவது, உறக்கம் கெடுதல், நிலையில்லாத ஒரு தன்மை உருவாகி மனம் அலை பாய்ந்துக்கொண்டே இருக்கும்.

டீ அதிக அளவில் குடித்தால் அதிலுள்ள டானிஸ் வேதிப்பொருள், உடலில் இரும்புச் சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது.  புற்றுநோய்க்கு மிக முக்கியமாக தரப்படும் கீமோ தெரபி நாம் கொடுக்கும்போது சிகிச்சை பலன் தராது. காரணம் அதிக அளவில் டீ குடிப்பதால், கீமோதெரபி மருந்துகள் உடலில் வேலை செய்யாத வாறு தடுத்து நிறுத்துகிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது. அதற்கு அதிக மாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீ தான், எல்லை மீறும் போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது.

இவ்வ‍ளவு ஏன், உங்கள் பற்களின் சிதைவுக்கும் அதிக அளவு டீ குடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

புராஸ்டேட் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கு டீயும் ஒரு காரணமாகவும் அமைந்து விடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. டீயில் டோனிக் அமிலம் உள்ளது. இது உடலில் இரும்புசத்து கிரகித்துக் கொள்வதை தடுத்து அனீமியாவை உண்டாக்க காரணமாகிறது.  

#உணவுக்குழாய், #புராஸ்டேட், #புற்றுநோய், #டீ, #தேனீர், #தேநீர், #வேதிப்பொருள், #இரும்புச்சத்து, #அமைதி, #கவனச்சிதறல், #உறக்கம், #தூக்கம், #டோனிக், #அமிலம், #பற்கள், #பல், #மூட்டு_வலி, #அனீமியா, #விதை2விருட்சம், #Esophagus, #Prostate, #Tea,  #chemical, #iron, #peace, #distraction, #sleep, #tonic, #acid, #teeth, #tooth, #joint_pain, #anemia, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply